யோகி பாபு மகனின் இரண்டாம் பிறந்தநாள், நேரில் சென்று வாழ்த்தியதோடு ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்த அமைச்சர்.

By Rajkumar · 27/12/2022

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

இறுதியாக இவர் ஹீரோவாக நடித்த 'மண்டேலா' படம் பல விருதுகளை குவித்ததோட இந்த ஆண்டின் டாப் 10 படங்களில் ஒன்றாக வந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒரு வழியாக நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார்.

யோகி பாபு திருமணம் :

யோகி பாபு அவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் திருமணம் செய்து கொண்டார்.யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இதில் பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.இருப்பினும் ரிஷப்ஷன் வைத்து அனைவரயும் அழைத்து தன் திருமணத்தை கொண்டாட திட்டமிட்டு இருந்தார் யோகி பாபு.

கொரோனாவால் கேன்சலான ரிஷப்ஷன் :

இப்படி ஒரு நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக இவரது திருமண வரவேற்பு நடைபெறாமேலே போனது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யோகி பாபுவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் தான் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே இரு மாநில எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார் யோகி பாபு.

யோகி பாபு மகன் 'விசாகன்' :

அதே போல கடந்த ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு தனது மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை நடாத்தி இருந்தார் யோகி பாபு. மேலும், தனது மகனுக்கு 'விசாகன்' என்று பெயர் வைத்துள்ளார். விசாகன் என்பது தமிழ் கடவுள் முருகனின் பெயர்களுள் ஒன்று. மேலும், நடிகர் யோகி பாபு , முருக கடுவுளின் தீவிர பக்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது மகனுக்கு முருக பெருமான் பெயரை வைத்தார்.

https://twitter.com/Subramanian_ma/status/1607645208120029184

மகனின் இரண்டாம் பிறந்தநாள் :

இந்த நிலையில் இன்று யோகி பாபுவின் மகனின் இரண்டாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் நேரில் கலந்துகொண்டு வாழ்த்திய அமைச்சர் மா சுப்ரமணியன், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு 'வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும், வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full