யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 16/5/2025

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க. இந்த படத்தில் சாந்தி ராவ், ஹரிஷ் பெரடி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை வினீஸ் மில்லினியம் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு எஸ்.என் அருணகிரி, ஜித்தின் ரோஷன் இசையமைத்திருக்கிறார்கள். மேஜிக் கலையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் யோகிபாபுவின் தந்தை பிரபலமான மேஜிக் கலைஞர் ஆக இருக்கிறார். பின் ஒருநாள் யோகி பாபுவின் தந்தை இறந்து விடுகிறார். இதனால் தந்தை செய்யும் மேஜிக் தொழிலை கையில் எடுக்கிறார் யோகி பாபு. ஆனால், இவருடைய மேஜிக் மக்களுக்கு பிடிக்கவில்லை. நிறைய பேர் விமர்சிக்கிறார்கள். தன்னுடைய தந்தை போல் மேஜிக் துறையில் ஜொலிக்க முடியாமல் யோகி பாபு அவஸ்தை படுகிறார்.

அதோடு யோகி பாபுவின் மேஜிக்கால் ஒரு குழந்தையும் பாதிக்கப்படுகிறது. இதனால் யோகி பாபுவை போலீஸ் கைது செய்கிறார்கள். இன்னொரு பக்கம் ரவுடி கும்பல் ஒன்று யோகிபாபுவின் கையை வெட்டி
விடுகிறார்கள். இதனால் அவரால் மேஜிக் செய்ய முடியாமல் போகிறது. இந்த நேரத்தில் தான் யோகி பாபுவுக்கு நெருக்கமான ஒரு சிறுமியை அந்த ரவுடி கும்பல் கொலை செய்கிறார்கள்.

இதனால் தன்னுடைய மேஜிக் திறமையை வைத்து அந்த கும்பலில் உள்ளவர்களை பழிவாங்க யோகி பாபு திட்டம் போடுகிறார். அந்த பிரச்சனைகள் எல்லாம் யோகி பாபு சமாளித்தாரா? யோகி பாபு ரவுடி கும்பலை பழிவாங்கினாரா? சட்டத்தில் இருந்து தப்பித்தாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. படத்தினுடைய நாயகன் யோகி பாபு தன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், காமெடி தான் குறைவு என்று சொல்லலாம்.

அதோடு யோகி பாபுவுக்கு ஜோடியாக சாந்தி ராவ் நடித்திருக்கிறார். இவருடைய கதாபாதம் பெரிதாக இல்லை. எதற்கு இவர் படத்திற்கு வந்து செல்கிறார் என்று கூட புரியவில்லை. இவரை அடுத்து படத்தில் போலீஸாக ஹரிஷ் போரடி நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் கல்கி, வசந்தி, மணிமாறன், அருவி பாலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே தங்களுடைய வேலையை செய்து இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டினுடைய பணி சிறப்பாக இருக்கிறது.

சொல்லப்போனால், படத்திற்கு இவருடைய ஒளிப்பதிவு தான் பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது.
பின்னணி இசை சுமாராகத்தான் இருக்கிறது. வழக்கமான பழி வாங்கல் கதையை தான் இயக்குனர் எடுத்து இருக்கிறார். இருந்தாலும் கதையை காமெடியாகவும் கமர்சியலாகவும் சொல்ல முயற்சித்து இருக்கிறார். ஆனால், பரபரப்பாக கொண்டு சென்றிருந்தால் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் இருந்திருக்கும். படம் ரசிகர்கள் மத்தியில் சளிப்படையாமல் சென்றிருக்கும்.

மேலும், யோகி பாபுவை காமெடியனாக மட்டும் காட்டாமல் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரமாக
இயக்குனர் கையாண்டிருப்பது பாராட்டுகுறிய ஒன்று. இருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். இயக்குனர் படத்தில் திரு பல திருப்பகளை வைத்திருந்தாலும் அதை பொறுமையாக கொண்டு சென்றிருப்பதால் படத்திற்கு பலவீனம். அதை யோகி பாபு தன்னுடைய நடிப்பின் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் செய்திருக்கிறார். மொத்தத்தில் ரொம்ப சுமாரான படமாக யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க இருக்கிறது.

நிறை:

யோகி பாபுவின் நடிப்பு

ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

கதைக்களம் ஓகே

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிறைகள் எதுவும் இல்லை

குறை:

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறையவே கவனம் செலுத்தி இருக்கலாம்

படத்தில் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

காமெடியில் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம்

மொத்தத்தில் ஜோரா கைய தட்டுங்க - சத்தம் குறைவு

Tamil Behind Talkies AMP · Quick view
View full