வீரப்பன் குடும்பத்தினரால் யோகி பாபு படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை - படக்குழு எடுத்த முடிவு.

By Rajkumar · 26/8/2021

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

தற்போது இருக்கும் தமிழ் காமெடி நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் காமெடி நடிகரும் இவர் தான். தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் இவர் தான் காமெடியனாக நடித்து வருகிறார். இறுதியாக இவர் ஹீரோவாக நடித்து வெளியான 'மண்டேலா' படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : வெறும் ப்ரா , Transperant புடவை - படு கவர்ச்சி உடையில் விஜய் டிவி சீரியல் நடிகை

தற்போதும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்திற்கு வீரப்பன் குடும்பத்தினரால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீரப்பனின் கஜானா'. இந்த படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என்று பலர் நடித்து வருகின்றனர்.

காடுகளின் பெருமையைத் திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசியுள்ள வீரப்பன் குடும்பத்தினர், வீரப்பன் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் படக்குழுவினர் 'வீரப்பனின் கஜானா' என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

behindtalkies AMP · Quick view
View full