நீங்க 'திமுக' வா ? அஞ்சனாவின் இந்த பதிவால் கேள்வி கேட்ட ரசிகர். அதற்கு அஞ்சனா கூறிய பதில்.

By Rajkumar · 2/2/2020

சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார்.

https://twitter.com/ShankarNaresh1/status/1222943892057870336

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வருகிறார்.

இதையும் பாருங்க : தர்ஷன் பஞ்சாயத்து பற்றிக்கொண்டு இருக்கும் வேலையில் வைரலாகும் ஷெரினின் நீச்சல் உடை புகைப்படங்கள்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் தொகுப்பாளினி அஞ்சனா ஒருவர். தொகுப்பாளினி அஞ்சனா அவர்கள் அடிக்கடி சமூக வளைத்தளத்தில் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதே போல அஞ்சனா அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

https://twitter.com/AnjanaVJ/status/1222944369151332353

அந்த புகைப்படத்தில் பில்டர் எதுவும் கிடையாது, சூரியன் முத்தமிட்டது (No Filter, Sun Kissed ) என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் சூரியன் என்று அஞ்சனா குறிப்பிட்டிருந்தால், ரசிகர் ஒருவர் நீங்க Dmk வா என்று கமன்ட் செய்திருந்தார். இதனை கண்ட அஞ்சனா ஷாக்கில் யோவ் என்று கமன்ட் செய்திருந்தார். இதை தொடர்ந்து பல ரசிகர்களும் இதற்கு கமன்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

behindtalkies AMP · Quick view
View full