யூத் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

By Ajju · 16/1/2018
கடந்த 2002ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த படம் யூத். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கேரக்டரில் ஒரு பெண் நடித்திருப்பார் தெரியுமா? அவர் யார்? தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா? இவருடைய உண்மையான பெயர் சாஹீன் கான். இவர் மும்பையில் பிறந்த வளர்ந்தாலும் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசுக்கூடியவர். பள்ளியில் படிக்கும் போதே இவர் மாடலிங் செய்து வந்தார். அதன் பின்னர் Fair And Lovely விளம்பரத்தில் நடித்து இந்திய முழுவதும் பிரபலம் ஆனார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. முதன் முதலாக 2001ல் நவ் தவுலு என்ற ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழில் ஈர நிலா என்ற படத்தில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. பொறுத்திருந்து 2002ல் விஜயுடன் நடித்த படம் தான் யூத். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் நல்ல கேரக்டர் கிடைக்காமல் நடிக்க மறுத்தார். பின்னர் திடீரென மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இருவருக்கும் ஆலம்கான் என்ற ஒரு குழந்தை உள்ளது. தற்போது எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் தானுண்டு தன் குடும்பம் உண்டு என மும்பையில் சேட்டில் ஆகிவிட்டார் சந்தியா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full