எனக்கு சாப்பாடு, தங்க இடம் கொடுத்தது எல்லாமே எஸ்கே சார் தான் - 'யூத்' பப்லுவின் எக்ஸ்குளூசிவ் தகவல்

By subhashini · 28/3/2026

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் யூத் என்ற படத்தை இயக்கியும் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் பப்லு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் சரத். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு முன்பே இவர் டான், லப்பர் பந்து போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது யூத் படம் தான். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் பப்லு சரத், நான் லப்பர் பந்து படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன். அந்த படத்தை பார்த்து கருணாஸ் சார் யூத் படத்தில் பப்லு கேரக்டருக்காக என்னை கென் இடம் சொல்லி இருந்தார். நான் ஒரு படப்பிடிப்பில் இருக்கும் போது தான் கென் எனக்கு கால் பண்ணினார். அப்போது அவர், நான் கென் பேசுகிறேன். உங்களுக்காக ஒரு கேரக்டர் எழுதி இருக்கேன் என்று சொன்னார். இரவு நேரத்தில் நம்மளை யார் கூப்பிடுவாங்க, பிராங்க் பண்றாங்கன்னு நினைத்து விட்டேன்.

யூத் படம்:

அதற்கு பிறகு உண்மையாலுமே கென் எனக்கு கால் பண்ணி இருக்கிறார் என்று தெரிந்தது. மீண்டும் அவரிடம் பேசி யூத் கேங்க்குள்ள நானும் ஒருவராக வந்து விட்டேன். கதை சொல்லும் போது எனக்கு படத்தில் ஒரு பைட் சீன் இருக்கு என்று சொல்லித்தான் கென் கதை சொன்னார். இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. என்னை எதற்காக இந்த படத்திற்கு தேர்வு செய்தீர்கள் என்ற காரணத்தை நான் கேட்டேன். என்னுடைய குரலுக்காக தான் கென் என்னை தேர்வு பண்ணியிருக்கிறார்.

சரத் பேட்டி:

ஏன்னா, என்னுடைய பேச்சு எல்லோருக்குமே புரியாது. எனக்கு தொண்டையில் சில பிரச்சினைகள் இருக்கு. அதனால்தான் என்னுடைய குரல் இப்படி இருக்கு. அதனால் தான் நான் ஆடிஷன் எங்க போனாலும் நீ இன்னும் தெளிவாக பேசணும் என்று சொல்வார்கள். இத்தனை நாட்களாக என்னுடைய குரல் எனக்கு நெகட்டிவ் ஆக இருந்தது. ஆனால், கென் மட்டும்தான் அந்த விஷயத்தை நேர்மையாக பார்த்தார். மேலும், நான் சிவகார்த்திகேயன் சார் மூலமாக தான் சினிமாவுக்கு வந்தேன். அவர்தான் என்னை முதன்முதலில் டான் படத்தில் நடிக்க வைத்தார்.

https://www.youtube.com/watch?v=BGxoWexw0Fw

சிவகார்த்திகேயன் பற்றி சொன்னது:

நான் முதலில் ஆபீஸ் பாயாக தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை பற்றி அங்கு இருக்கிறவங்க எஸ்கே சார் இடம் சொல்லி இருக்காங்க. அப்படி ஒரு நாள் ஆபீஸில் சுத்திட்டு இருக்கும்போது எஸ்கே சார், சிபி சக்ரவர்த்தி சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். பிறகு தான் சினிமா வாய்ப்பு கிடைத்தது. எஸ்கேப் ப்ரொடக்ஷனில் நான் வேலை செய்யவில்லை என்றாலும் நான் அந்த ஆபீஸில் தான் தங்கி இருக்கிறேன். சாப்பாடு வேணும் வெளியே போனால் நிறைய செலவாகும் என்று என்னை அங்கே தங்கிக்க சொல்லிவிட்டார் எஸ்கே. இப்பவும் அங்கதான் தங்கி இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full