YouTube-யில் இருந்து மெர்சல் டீசர் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன ?

By Tamil Selvam · 22/9/2017
நேற்று மெர்சல் டீசர் YouTube இணையதளத்தில் வெளியானது, வெளியானது முதலே மெர்சல் டீசர் பல சாதனைகளை முறியடித்து 11,785,598 views பெற்று ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது. இதனிடையே டீசர் காட்சியில், காப்புரிமை(Copy Rights) பெறப்பட்ட காட்சிகளோ அல்லது விடயங்களோ இருப்பதால் எந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது என்று வரத்துவங்கியது. ஆனால் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காப்புரிமை கோரி யாரோ புகார் அளித்திருப்பதாக தெரிகிறது, இந்த சம்பவம் ரசிகர்களை  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மீண்டும் சாதனை படைக்க டீசர் திரும்பியதால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்தனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full