ஐ வாஸ் ராங், நான் அப்படிப்பட்டவன் இல்லை, நடந்தது இதுதான் - சர்ச்சைக்கு யூடியூப்பர் இர்பான் விளக்கம்

By subhashini · 29/4/2025

சமீப காலமாக யூடியூபர் இர்பான் குறித்த சர்ச்சை தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ரமலான் பண்டிகை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு, உடை வழங்க காரிலேயே தன்னுடைய மனைவியுடன் இர்பான் சென்று இருந்தார். அப்போது ஒவ்வொரு பகுதியாக சென்று ஏழை மக்களை சந்தித்து உதவி பொருட்களை காருக்குள்ளே உட்கார்ந்து தந்திருந்தார் இர்பான். காருக்குள்ளேயே கையை நீட்டி மக்கள் ஆர்வக்கோளாறில் வாங்கி இருந்தார்கள்.

எதிர்பாராத விதமாக பொருள் வாங்கும் போது இர்பான் மனைவியின் கையை நகத்தால் இழுத்து விட்டிருந்தார்கள். இதனால் கோபம் அடைந்த இர்பான், இப்படி அசிங்கமாக பண்ணாதீங்க, ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க, எல்லோருக்கும் கொடுக்க தான் வந்திருக்கோம். ஏன் இப்படி பிடிச்சு இழுக்கிறீங்க? அதுங்க இதுங்க என்று கோபமாக பேசி திட்டி இருந்தார். இதை இவர் வீடியோவாகவும் எடுத்து சேனலில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலர், இர்பானை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.

இர்பான் பற்றிய சர்ச்சை:

அதோடு இர்பான் இது தொடர்பாக மன்னிப்பும், விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால் இவரை பாலோ செய்பவர்கள் பலருமே எரிச்சல் அடைந்து அவருடைய சேனலில் விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இதனால் இவருடைய சப்ஸ்கிரைபர்கள் மளமளவென சரிய தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டு இர்ஃபான் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் செய்த தவறுதான். ஐ வாஸ் ராங்.

இர்பான் வீடியோ:

அந்த சர்ச்சை நடந்த போது நான் அது குறித்து விளக்கம் அளிக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், என்னுடைய நலன் விரும்பிகள் தான் இப்போது விளக்கம் அளிக்க வேண்டாம் என்று அறிவுரை செய்தார்கள். அதனால் தான் நான் அமைதியாகி விட்டேன். நான் வறுமையில் இருப்பவர்களை ஏளனமாக பேசியதாக சொல்கிறார்கள். நான் அந்த மாதிரி ஆள் கிடையாது. நானும் அங்கிருந்துதான் வந்தேன். நான் ஒருபோதும் வறுமையை ஏளனம் செய்பவன் கிடையாது. இல்லாதவர்களை பார்த்து சிரிப்பவனும் கிடையாது.

https://youtu.be/d0rNR6Dpr34?si=ZVaSdbm1U7LxShbl

ரமலான் சர்ச்சை:

நான் சாலையோரத்தில் இருக்கும் சின்ன குழந்தைகளை அதுங்க, இதுங்க எனும் மரியாதை குறைவாக பேசியதாக விமர்சித்தார்கள். நான் என் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அப்படித்தான் அன்புடன் பேசுவேன். அந்த மாதிரியான அன்பில்தான் அந்த குழந்தைகளையும் அதுங்க இதுங்க என்று பேசினேன். என்னை விமர்சித்தவர்களின் வீடியோக்களை நான் பிளாக் செய்யவில்லை. divo என்ற நிறுவனம்தான் என்னுடைய வீடியோக்களை பார்த்துக் கொள்கிறது.

மன்னிப்பு கேட்ட இர்பான்:

அவர்கள் தான் ஆட்டோமேட்டிக்காக என்னுடைய வீடியோவை பயன்படுத்துவரின் வீடியோவை பிளாக் செய்தார்கள். அது அவர்களுடைய வேலை. என் கூட இருப்பவர்கள் நான் மதித்த நபர்கள் என்னை கடுமையாக விமர்சித்தது எனக்கு ரொம்ப மன வருத்தத்தை தந்தது. தனிமைப்படுத்துவது போல உணர்ந்தேன். நான் பண்ணது தப்புதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னால் வேதனைப்பட்ட அந்த நபர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full