நெப்போலியன் மகனுக்கு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த இர்பான், அசந்து போன குடும்பம்-என்ன தெரியுமா?
நெப்போலியன் மகன் தனுஷுக்கு யூடுயூபர் இர்பான் கொடுத்து இருக்கும் கிப்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக நெப்போலியன் மகனின் திருமணம் குறித்த செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் சினிமா நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ், மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி என்ற தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகனின் சிகிச்சைக்காக இந்தியாவை விட்டுச் சென்று குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். அமெரிக்காவில் நெப்போலியன் ஹைடெக் விவசாயம் செய்வதோடு, ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி அதற்கு தனுஷை முதலாளி ஆக்கியிருக்கிறார்.
தனுஷ் நிச்சயதார்த்தம்:
அந்த நிறுவனத்தில் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பணி புரிவதாக கூறப்படுகிறது. அமர்ந்த இடத்திலிருந்து தொழில்நுட்பத்தின் வசதியோடு அந்த நிறுவனத்தை நிர்வாகித்து வருகிறார் தனுஷ். இப்படிப்பட்ட சூழலில் தனுஷுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, சமீபத்தில் தான் நெப்போலியன் மகன் தனுஷுக்கு திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவோடு நிச்சயதார்த்தம் நடந்தது. அதோடு தனுஷ் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ கால் மூலமாக தான் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் குறித்த தகவல்:
பின், இவர்களது திருமணம் ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே நெப்போலியன் குடும்பம் அமெரிக்காவிலிருந்து ஜப்பான் புறப்பட்டனர். ஜப்பானில் திருமணம் நடத்த வேண்டும் என்பது தனுஷின் ஆசை. இத்திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கலா மாஸ்டர், ராதிகா, சரத்குமார், மீனா, கலா, யூடியூபர் இர்ஃபான் என பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்து இருந்தார்கள். மேலும், திருமணத்துக்கு முன்பாக நலங்கு, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில் சங்கீத் நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி கொடுத்தார்.
தனுஷ்-அக்ஷ்யா திருமணம்:
பின்பு மணமக்கள் தனுஷ்-அக்ஷயாவிற்கு போட்டோஷாப் நடத்தப்பட்டுள்ளது. மேலும், சில வாரங்களுக்கு முன்பு தான் தனுஷ்-அக்ஷ்யா திருமணம் கோலாகலமாய் தமிழர்களின் கலாச்சாரப்படி நடந்தது. இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு யூடுயூபர் இர்பான் கொடுத்து இருக்கும் கிப்ட் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இர்பான் கொடுத்த பரிசு:
யூடுயூபர் இர்பானின் தீவிர ரசிகர் தான் தனுஷ். இவருக்காகவே இர்ப்பான் அமெரிக்கா சென்று தனுசை சந்தித்திருந்தார். அந்த புகைப்படம் எல்லாமே வைரலாகி இருந்தது. பின் தனுஷின் திருமணத்திற்கு இர்பானின் வீட்டிற்கு நேரில் சென்று நெப்போலியன் பத்திரிக்கை வைத்திருந்தார். மேலும், இந்த திருமணத்தில் யூடுயூபர் இர்பான் கலந்து மணமக்களை வாழ்த்தி இருந்தார். அதன் பின் இவர் தனுஷ்- அக்ஷயா தம்பதிக்கு காஸ்ட்லியான வாட்ச்சை பரிசாக கொடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.