ஆட்டிசம் பாதித்த மகனுக்காக தந்தை செய்த தியாகம், இர்ஃபானின் செயலால் கதறி அழும் குடும்பம்

By subhashini · 3/9/2024

ஒரு தந்தையின் தியாகத்தை பார்த்து யூடியூபர் இர்ஃபான் செய்திருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை ரயில் நிலையம் அருகில் ஒரு பிரபலமான தனியார் உணவகம் இருக்கிறது. இந்த உணவகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியில் அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், நாலு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என்று ஹோட்டலின் உரிமையாளர் அறிவித்து இருந்தார்.

அதன்படி பிரியாணி சாப்பிடும் போட்டியில் பலருமே ஆர்வத்துடன் கலந்து கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு போட்டியாளர் மட்டும் அழுதபடி ரொம்ப கஷ்டப்பட்டு சாப்பிட்டு இருந்தார். உடனே அவரை பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்தார்கள். அப்போது அவர், என்னுடைய பெயர் கணேஷ் மூர்த்தி. நான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவன். என்னுடைய மகனுக்காக தான் நான் இந்த போட்டியில் கலந்து கொண்டேன். என்னுடைய மகன் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவன்.

https://www.youtube.com/watch?v=4aI0e49mp98

பிரியாணி சாப்பிடும் போட்டி:

நான் வாடகை வண்டி ஓட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறேன். என்னுடைய மகனின் மருத்துவம், மற்றும் கல்வி செலவிற்காக ரொம்ப கஷ்டப்படுகிறேன். அதற்காகத் தான் இந்த போட்டியில் நான் கலந்து கொண்டேன். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து என் மகனுடைய கல்வி மற்றும் மருத்துவ செலவை பார்த்து கொள்ள வந்தேன் என்று கஷ்டப்பட்டு சாப்பிட்டுக் கொண்டே கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=JkBRww2KyRo

தந்தை செய்த தியாகம்:

மேலும், இவர் மூன்று பிரியாணியை சாப்பிடும் போதே இவருக்கு முடியவில்லை. இருப்பினும், மூச்சுத் திணறி, முடியால் இருந்தாலுமே இவர் விடாமல் நான்கு பிரியாணியை சாப்பிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். பின் இவருக்கு 50,000 பணமும் வழங்கப்பட்டது. தந்தை தன் மகனுக்காக செய்த தியாகத்தை எண்ணி பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் இதை பார்த்த பிரபல யூடியூபர் இர்ஃபான் அவர்கள் கணேஷ் மூர்த்தியை நேரில் சந்தித்து பாராட்டி இருந்தார்.

இர்பான் செய்த உதவி:

பின் அவருக்கு ஒரு லட்சம் ரூபாயை வழங்கி உதவியும் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரைப் போன்று இருக்கும் மற்ற யூடியூபர்களிடமும் பணத்தை வாங்கி கணேஷ் மூர்த்திக்கு உதவி செய்திருக்கிறார். இர்ஃபான் மற்றும் அவருடைய நண்பர்கள் செய்த உதவியை எண்ணி கணேஷ் மூர்த்தி குடும்பம் ரொம்பவே கண்ணீர் விட்டு அழுது நன்றி தெரிவித்திருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இர்பான் குறித்த தகவல்:

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகர் ஆன இர்ஃபானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்ஃபான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவின் டேஸ்ட் குறித்தும், தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full