சர்ச்சைக்கு மத்தியில் தன் மகளுக்கு பெயர் வைத்த யூடியூபர் இர்ஃபான்- என்ன பெயர் தெரியுமா?
தன் மகளுக்காக இர்ஃபான் வைத்து இருக்கும் பெயர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக இர்ஃபான் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சினிமா நடிகர்களை விட ட்ரெண்டிங்கில் உள்ளவர்கள் யூடியூபர்கள் தான். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகர் இர்ஃபானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவுகளின் டேஸ்ட் குறித்தும், தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் எப்போதும் அரை ட்ரவுசர் போட்டுக் கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகளில் உள்ள காஸ்ட்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கூட கிடைத்திருக்கிறது. மேலும், இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து முடிவு செய்த இந்த திருமணம் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான யூடியூபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி இருந்தார்கள்.
இர்ஃபான் குறித்து:
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் இர்ஃபான் போட்டியாளராக கலந்துகொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனிடையே இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக இருந்தார் என்று அறிவித்து இருந்தார். அதற்கு பின் இர்பான் மனைவியின் வளைகாப்பு புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. பின் சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் இர்ஃபான் துபாய் சென்று இருந்தார்.
சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான்:
அங்கு கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டார். இதனை வைத்து ஜெண்டர் ரிவில் வீடியோவை இர்ஃபான் வெளியிட்டு இருந்தார். இதற்கு இவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அதோடு மருத்துவ கவுன்சில் இர்ஃபான் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலர் கூறிய நிலையில் அதற்கான நோட்டீசும் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அந்த சம்பவத்திற்கு இர்ஃபான் மன்னிப்பு கேட்டும் , அந்த வீடியோவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இருந்தார்.
மீண்டும் சர்ச்சையில் இர்ஃபான்:
இந்த சர்ச்சை ஓய்ந்து சில மாதங்களே ஆன நிலையில், தற்போது அதே குழந்தை விவகாரத்தை வைத்து புதிய சர்ச்சை ஒன்றில் இர்ஃபான் சிக்கியுள்ளார். சமீபத்தில் இர்ஃபான் தனது யூடியூப் சேனலில் தன் மனைவியின் பிரசவ நிகழ்வை வீடியோவாக பதிவு செய்தை வெளியிட்டு இருந்தார். அதில் மனைவியின் பிரசவத்தில் குழந்தை தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் தான் வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் இர்ஃபான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இர்ப்பான் மகள் பெயர்:
இதனால் இர்பான் வீடியோ எடுத்த மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்து ஊரக நலப்பணித்துறை இயக்கம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இது தொடர்பாக பல பேர் பலவிதமான கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இர்பான் தன்னுடைய மகள் பெயர் சூட்டியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இர்பான் தன் மகளுக்கு குழந்தைக்கு Ifa என்று பெயர் வைத்து இருக்கிறார். ஐஃபா என்பது ரிச்னஸ் என்று அர்த்தம். தமிழில் மதிப்பு மிக்க என்று பொருள். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்