சர்ச்சையில் சிக்கிய பாடி ஷேமிங் விவகாரம் - கெளரி கிஷனிடம் மன்னிப்பு கேட்ட யூடியூபர் கார்த்திக்
கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே கௌரி கிஷன் விவகாரம் தான். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கௌரி கிஷன்.
96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் உருவாகி இருக்கும் படம் அதர்ஸ். இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=nV7PG5oaF7M
இந்த படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். மெடிக்கல் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கான ப்ரோமோஷனின் போது செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் செய்தியாளர் ஹீரோவிடம், கௌரி கிஷனை தூக்கிறீர்களே, அவருடைய வெயிட் எவ்வளவு இருந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதை கேட்டு கோபப்பட்ட கௌரி கிஷன், என்னுடைய உடல் எடையை தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒருவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவதெல்லாம் கேள்வியா.
கௌரி கிஷன் சர்ச்சை:
நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதை குறித்து கேளுங்கள். இங்க நான் மட்டுமே தான் பெண். இப்படி பாடி ஷேமிங் செய்வது, அவமானப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நடிகையினுடைய உடல் எடையை தெரிந்து கொள்வது அநாகரிகமானது. இதெல்லாம் ஒரு கேள்வியா? என்னைப் பற்றி stupid தனமாக கேட்ட கேள்விக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார். இதனால் பத்திரிகையாளருக்கும் கௌரி கிஷனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
பிரபலங்கள் ஆதரவு:
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது தொடர்ந்து பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், பிரச்சனையின் போது அதர்ஸ் பட இயக்குனர்-ஹீரோ எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தது தவறு என்று விமர்சித்து வருகிறார்கள். பின் நடிகை கௌரி கிஷன் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதோடு கௌரி கிஷனிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட youtuber கார்த்திக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.
youtuber கார்த்திக் மன்னிப்பு:
இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் youtuber கார்த்திக் மன்னிப்பு கேட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக youtuber கார்த்திக் வெளியிட்ட வீடியோவில் கௌரி கிஷன், கௌரி கிஷனை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். அதே சமயம் நான் பாடி ஷேமிங் செய்யவில்லை. என்னுடைய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.