11 ஆண்டு கழித்து இரண்டாம் குழந்தையை பெற்றெடுகொண்டது இதனால் தான் - சீரியல் நடிகை காயத்ரி சொன்ன காரணம்.

By subhashini · 11/2/2024

திருமணமாகி 11 வருடங்கள் கழித்து இரண்டாம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து சீரியல் நடிகை காயத்ரி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும், விஜய் டிவி சீரியல்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ்.

இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் இவர் முறையாக நடனமும் கற்றுக் கொண்டார். பின் இவர் தன்னுடைய கணவர் யுவராஜின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியதன் மூலம் தான் விஜய் டிவிக்கு அறிமுகமானார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்தார்.

இவர் அதிகம் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம். மேலும், இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று வருகிறார். டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காயத்திரி திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்கு தருண் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 12 வயது ஆகிறது. மேலும், இவர்களுடைய மகனுடன் சேர்ந்து இவர்கள் எடுத்த ரிலீஸ் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் படு பேமஸ்.

இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கர்ப்பமானார் காயத்ரி. இதனால் தான் நடித்த சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். 11 ஆண்டு கழித்து மீண்டும் பிறக்கப்போகும் குழந்தையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த வேளையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யுவராஜ் - காயத்ரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதிலும் காயத்ரியின் பிறந்தநாளில் குழந்தை இருப்பதாக மகிழ்ச்சியுடன் அறிவித்து இருந்தார் யுவராஜ்.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காயத்ரி 11 ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் 'நான் இரண்டாம் முறை கர்ப்பமாக இருந்தபோது அதை கண்டிப்பாக ஆண் குழந்தை தான் என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன் ஆனால் அவர் இல்லை கண்டிப்பாக இது பெண் குழந்தை தான் பெண் குழந்தை தான் என்று உறுதியாக சொல்லிக் கொண்டே இருந்தார்.

மருத்துவமனையில் குழந்தை பிறந்த பின்னர் கூட நான் பெண் குழந்தை என்று நம்பவே இல்லை ஆனால் மருத்துவர்கள் எல்லாம் இல்லை பெண் குழந்தை தான் என்று என்னிடம் காட்டினார்கள் என்னுடைய மகன் பிறந்த பின்னர் நாங்கள் இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்வது பற்றி யோசிக்கவே இல்லை. ஏனென்றால் எங்களுடைய முழு அன்பும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் யோசித்து அந்த முடிவை எடுத்தோம்.

ஆனால் என் மகன் வளர்ந்த பின்னர் அடிக்கடி எனக்கு ஒரு தங்கையோ அல்லது தம்பியோ இல்லையே என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான். அவனுடைய ஏக்கம் எங்களுக்கு புரிய ஆரம்பித்தது. ஆனால் இன்னொரு குழந்தை பிறந்தால் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்வான் என்று நாங்கள் யோசித்துக் கொண்டே இருந்தோம். ஆனால் அவன் என்னுடைய மகளை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்கிறான். அனைவரிடமும் நான் சொல்லிக் கொள்வது ஒரே விஷயம் தான். தயவு செய்து ஒரு குழந்தையோடு நிப்பாட்டி விடாதீர்கள், உங்களுடைய குழந்தைக்கு இன்னொரு ஆதரவு நிச்சயம் தேவை' என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full