வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட Vj அர்ச்சனாவின் மகள் - வீடியோ இதோ.

By Rajkumar · 6/6/2020

பெண் தொகுப்பாளினிகள் அரிதாக இருந்த காலம் முதல் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. 90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற 'இளமை புதுமை' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள்.ளமை புதுமை நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விளக்கினார் அர்ச்சனா.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ச ரி க ம ' ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா. மேலும், இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். சமீபத்தில் இவரும் இவரது செல்ல மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் மாம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

https://www.instagram.com/p/CBD1-J_FpN_/?igshid=1soylvx9ilpqi

தனது அம்மாவிற்கு இணையாக சிறு வயதில் ஆங்கரிங் செய்து அசத்திய அர்ச்சனாவின் மகளை கண்டு பலரும் வியந்து போனார்கள். இந்த நிலையில் அர்ச்சனாவின் மகள் 'மாஸ்டர் ' படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ, அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அர்ச்சனா. இதோ அந்த வீடியோ.

behindtalkies AMP · Quick view
View full