பாக்கியத்தை சமாதானப்படுத்திய பரணி, ரத்னாவின் மாமியார் செய்த வேலை - விறுவிறுப்பில் அண்ணா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'அண்ணா' . தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். இந்த வாரம், சௌந்தர பாண்டிக்கு எதிராக சண்முகம் பஞ்சாயத்து கூட்டுகிறார். அப்போது, சண்முகம் எவ்வளவு சொல்லியும் இசக்கி மனம் மாறாமல் நிற்க, தன் தோளில் இருக்கும் துண்டை கீழே போட்டு, எல்லாத்தையும் தூக்கிப்போட்டு இந்த துண்டை தாண்டி வா என்று இசக்கியை அழைக்கிறார்.
அப்போது சௌந்தரபாண்டி, இசக்கி இப்போ என் மருமகள் அவ வரமாட்டா என்று சண்முகத்தை வெறுப்பேற்றுவதைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார். பின் ஒரு வழியாக இசக்கி, எனக்கு என் அண்ணன் தான் முக்கியம் என்று சௌந்தர பாண்டிக்கு பதிலடி கொடுத்துவிட்டு துண்டைத் தாண்டி சண்முகத்துடன் போய்விடுகிறார். சண்முகமும் தனது தங்கையை மேளத்தாளத்துடன் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அதைத்தொடர்ந்து இசக்கியை ஆரத்தி எடுத்து அவரது தங்கை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்.
அண்ணா சீரியல்:
பின், சண்முகம் இந்த வீட்டில் எந்த பயமும் இல்லாமல் நீ தைரியமாக இருக்கலாம் என்று இசக்கிக்கு ஆறுதலாக பேசுகிறார். அப்போது வீட்டுக்கு வந்த பரணி, நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு கோபமாக உள்ள செல்கிறார். பின் நேற்று எபிசோடில், இசக்கி விஷயத்தில் கோவமாக இருக்கும் பரணியை சண்முகம் பேசி சமாதானம் செய்கிறார். பின், ரத்னா வீட்டிற்கு வந்து இசக்கியின் முடிவை பாராட்டுகிறார்.
நேற்றைய எபிசொட்:
அதைத்தொடர்ந்து வீரா போலீஸ் ட்ரைனிங் முடித்து வீட்டிற்கு வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது பரணி ரத்னாவிடம், உன்னை வெங்கடேசன் வீட்டில் விட்டுட்டு வந்தது உன்னோட நல்லதுக்கு தான் என சொல்கிறார். அதற்கு ரத்னா ஒரு அண்ணியா உன் வேலையை நல்லபடியா பண்ணிட்ட, இனிமே என் நல்லதுக்கு நீ எதுவுமே பண்ண வேண்டாம் என சொல்லிவிட்டு போய்விடுகிறார். அதனால் பரணி ரொம்ப வருத்தப்படுகிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், பாக்கியம் கோபத்தில் சமைக்காததால் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா கஷ்டப்படுகிறார்கள். அப்போது பரணி தன் அம்மாவை பார்ப்பதற்காக சாப்பாடு கொண்டு வருகிறார். அப்போது சௌந்தரபாண்டி, வாழா வெட்டி இசக்கி எப்படி இருக்கிறாள் என்று கேட்க, பரணி அவருக்கு பதிலடி கொடுக்கிறார். பின் தன் அம்மாவை சமாதானப்படுத்தி, பரணி சாப்பிட வைக்கிறார். அதோடு, இசக்கி சீக்கிரம் இந்த வீட்டுக்கு வந்து விடுவாள் என்று பாக்கியத்திடம் பரணி வாக்குறுதி கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து, சௌந்தரபாண்டியிடம், ஒரு நம்பர் வந்து சண்முகம் உங்கள் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாராமே என்று கேட்க, அவர் சண்முகம் குறித்து தப்பு தப்பாக அந்த நபரிடம் கூறுகிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து சண்முகம் அந்த இடத்திற்கு வர, இவன்லாம் ஒரு பிரசிடெண்ட் என்று சௌந்தரபாண்டி திட்டுகிறார். பின் அந்த நபர் சண்முகத்திடம் வந்து, ஒரு பொண்ணை வாழ வெட்டியாக வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டியே நியாயமா என்று கேட்க, அந்த ஐயா சௌந்தரபாண்டி என்ன செய்தார் தெரியுமா என்று வெட்டுக்கிளியிடம் இருந்து அந்தப் பிட் நோட்டீஸ் வாங்கி கொடுக்கிறார். இதையடுத்து, ரத்னாவின் மாமியார் தன் மகன் வெங்கடேசனிடம், இசக்கியை அவள் அண்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டானாம். உன் பொண்டாட்டி இன்னைக்கு தான் அவங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வந்தா, அவளை கொஞ்சம் அடக்கிவை என்று ஏத்தி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது