பரணியை நோகடித்த ரத்னாவின் வார்த்தை, சண்முகம் செய்யப் போவது என்ன? -விறுவிறுப்பில் அண்ணா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'அண்ணா' தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். கடந்த வாரம், சண்முகம் சௌந்தரபாண்டிக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டுகிறார். அங்க இருக்கும் பெரியவர்களிடம், சௌந்தரபாண்டி ஏற்கனவே என் தங்கச்சியை நிறைய கொடுமை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நேற்று மண்ணெண்ணையை ஊற்றி கொழுத்த போனார். அதற்கு அவருடைய அக்கா பாண்டியம்மாவும் துணை போயிருக்கிறார்.
அவங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் காப்பாற்ற முடியாமல் நின்று இருக்கிறார்கள். அதனால், இவ்வளவு கொடுமைகளோடு என் தங்கச்சி அந்த வீட்டில் இருக்கக் கூடாது, பெரியவர்கள் பேசி என் தங்கச்சியை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார்.
அதற்கு, பாக்கியம் இசக்கியிடம் நீ உங்க வீட்டுக்கு போய் விடாதே. நீ போய்ட்டா நான் பாண்டிக்கு என்ன பதில் சொல்வேன் என்று அழுகிறார். பின் சண்முகம், உன் உசுரு தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம். எதுவும் வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு வா என்று இசக்கியிடம் சொல்கிறார்.
அண்ணா சீரியல் :
அதோடு, எங்க வாழ வேண்டும் என்று ஒரு ஆணுக்கு எப்படி உரிமை இருக்கோ, அதே மாதிரி பெண்ணுக்கும் இருக்கிறது. நீ வா அண்ணன் பார்த்துக்கொள்கிறேன் என்று இசக்கியிடம் சண்முகம் சொல்கிறார். இசக்கி ஒன்றும் புரியாமல் அப்படியே நிற்கிறார். இந்நிலையில் நேற்று எபிசோடில், சண்முகம் எவ்வளவு சொல்லியும் இசக்கி மனம் மாறாமல் அப்படியே நிற்கிறார். பின், தன் தோளில் இருக்கும் துண்டை கீழே போட்டு, எல்லாத்தையும் தூக்கிப்போட்டு இந்த துண்டை தாண்டி வா என்று இசக்கியை அழைக்கிறார்.
நேற்றைய எபிசொட்:
அப்போது சௌந்தரபாண்டி, இசக்கி இப்போ என் மருமகள் அவ வரமாட்டா என்று சண்முகத்தை வெறுப்பேற்றுவதைப் போல் பேசிக் கொண்டிருக்கிறார். பின் ஒரு வழியாக இசக்கி, எனக்கு என் அண்ணன் தான் முக்கியம் என்று சௌந்தர பாண்டிக்கு பதிலடி கொடுத்துவிட்டு துண்டைத் தாண்டி சண்முகத்துடன் போய்விடுகிறார். சண்முகமும் தனது தங்கையை மேளத்தாளத்துடன் தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அதைத்தொடர்ந்து இசக்கியை ஆரத்தி எடுத்து அவரது தங்கை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்.
இன்றைய எபிசொட்:
பின், சண்முகம் இந்த வீட்டில் எந்த பயமும் இல்லாமல் நீ தைரியமாக இருக்கலாம் என்று இசக்கிக்கு ஆறுதலாக பேசுகிறார். அப்போது வீட்டுக்கு வந்த பரணி, நடப்பதை எல்லாம் பார்த்துவிட்டு கோபமாக உள்ள செல்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், இசக்கி விஷயத்தில் கவனமாக இருக்கும் பரணியை சண்முகம் பேசி சமாதானம் செய்கிறார். பின், ரத்னா வீட்டிற்கு வந்து இசக்கியின் முடிவை பாராட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதைத்தொடர்ந்து வீரா போலீஸ் ட்ரைனிங் முடித்து வீட்டிற்கு வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது பரணி ரத்னாவிடம், உன்னை வெங்கடேசன் வீட்டில் விட்டுட்டு வந்தது உன்னோட நல்லதுக்கு தான் என சொல்கிறார். அதற்கு ரத்னா ஒரு அண்ணியா உன் வேலையை நல்லபடியா பண்ணிட்ட, இனிமே என் நல்லதுக்கு நீ எதுவுமே பண்ண வேண்டாம் என சொல்லிவிட்டு போய்விடுகிறார். அதனால் பரணி ரொம்ப வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.