ரத்னாவின் முடிவால் கதி கலங்கி போயிருக்கும் சண்முகம் குடும்பம் - சோகத்தில் 'அண்ணா'
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'அண்ணா' . தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். இந்த வாரம், ரத்னாவின் மாமியார் தன் மகன் வெங்கடேசனை ஏத்தி விட வெங்கடேஷ் ரத்னாவிடம் டாக்குமெண்டை கொடுத்து ஸ்கூலை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி கையெழுத்து போட சொல்கிறார். ஆனால், ரத்னா கையெழுத்து போட முடியாது என்று மறுக்க, வெங்கடேஷ், உனக்கு இதை விட்டா வேற வழியே இல்ல என்று ரத்னாவை மிரட்டுகிறார். அப்போது, எனக்கு ஒரு பிரச்சனை என்றால் என் அண்ணன் வந்து நிற்பான் என ரத்னா சொல்கிறார்.
அதற்கு வெங்கடேஷ், பரணி என்ன பண்ணுவாங்க? உன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இங்க தள்ளிவிட்டு போவாங்க. உன்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கணும்னு எனக்கு தெரியும் என மிரட்டுகிறார். மறுபக்கம் , பரணிக்கு உடம்பு முடியாமல் போக, சண்முகமே டாக்டராக மாறி பரணிக்கு ரொமான்டிக் ட்ரீட்மென்ட் கொடுக்கிறார். பின், மூணு வேளை சுடுதண்ணீர் ரசம் சாதம் தான் சாப்பிடணும் என பிரிஸ்கிரிப்ஷன் எழுதிக் கொடுக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க ரத்னா, வெங்கடேஷ் சொன்ன வார்த்தைகளால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறார்.
அண்ணா சீரியல்:
பின் நேற்றைய எபிசோடில் ரத்னா, வெங்கடேஷ் பேசியதும் சண்முகம் சண்டை போட்டு வீட்டுக்கு அழைத்துச் செல்ல, பரணி மீண்டும் அழைத்து வந்து வெங்கடேஷ் வீட்டில் விட்டு சென்றது போன்ற விஷயங்களை நினைத்துப் பார்த்து, அண்ணா என்னை மன்னித்துவிடு நான் செய்வது தப்பு தான். ஆனால், எனக்கு இதை விட்டா வேற வழி தெரியவில்லை என கடலுக்குள் இறங்குகிறாள். மறுபக்கம் சண்முகம் மற்றும் பரணி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்றைய எபிசொட்:
அந்த சமயம் பார்த்து திடீரென்று சண்முகத்திற்கு, ரத்னாவின் ஞாபகம் வர ரத்னாவை பார்த்துட்டு வந்துவிடலாம் என்று சொல்லி, பரணியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். வெங்கடேஷ் வீட்டுக்கு வந்து ரத்னாவை கேட்க, ரத்னா வீட்டில் இல்லை என்ற விஷயம் தெரிய வந்ததும் சண்முகம் கோவப்பட்டு அவர்களிடம் சண்டை போடுகிறார். பின், ரத்னா காணாமல் போன விஷயம் வைகுண்டம் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிய வர, எல்லோரும் ஒன்று சேர்ந்து ரத்னாவை தேடத் தொடங்குகின்றனர்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரத்னாவை எங்கு தேடியும் கிடைக்காமல் குடும்பத்தினர் பதறிப் போய் இருக்கிறார்கள். இதையடுத்து, சண்முகத்திற்கு போலீஸ் ஒருவர் கால் செய்து, கடலோரத்தில் ஒரு லேடிஸ் பர்ஸ் இருந்தது அதில் உங்கள் நம்பர் தான் இருந்தது என்று சொல்ல அனைவரும் பதறிப் போகிறார்கள். பின், அனைவரும் குடும்பத்தோடு கடற்கரைக்கு சென்று ரத்னாவை தேட, ரத்னாவின் செருப்பு மற்றும் கொலுசு கிடைக்கிறது.
சீரியல் ட்ராக்:
அதனால், குடும்பத்தினர் அனைவரும் கடலைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், வெங்கடேசன் குடும்பத்தினர் ஏதாவது பிரச்சனையாவதற்கு முன்பு ஊரை விட்டு போய் விடுவோம் என்று வீட்டை விட்டு வெளியே வர, போலீஸ் வந்து அவர்களை கைது செய்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் வெங்கடேசனின் குடும்பத்தை சண்முகம் அடித்து தும்சம் செய்து அழுது கொண்டிருக்கிறார். கடைசியில், ரத்னாவின் உடல் கடலோரமாய் ஒதுங்க, அங்கு இருப்பவர்கள் இந்த பெண்ணிற்கு மூச்சுப் பேச்சு இல்லை பாவம் யார் பெத்த பொண்ணோ என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.