மகள் கனி மூலம் துப்பு கொடுத்த சண்முகம் அம்மாவின் ஆன்மா, ரத்னா கிடைத்தாரா?- விறுவிறுப்பில் அண்ணா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'அண்ணா' . தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதைதான் இந்த சீரியல். கடந்த வாரம், ரத்னாவின் மாமியார் தன் மகன் வெங்கடேசனை ஏத்தி விட, அவர் ரத்னாவை டார்ச்சர் செய்து இருந்தார். அதனால் மனமுடைந்த ரத்னா, அண்ணா என்னை மன்னித்துவிடு நான் செய்வது தப்பு தான். ஆனால், எனக்கு இதை விட்டா வேற வழி தெரியவில்லை என கடலுக்குள் இறங்குகிறாள். மறுபக்கம் சண்முகம் மற்றும் பரணி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த சமயம் பார்த்து திடீரென்று சண்முகத்திற்கு, ரத்னாவின் ஞாபகம் வர ரத்னாவை பார்த்துட்டு வந்துவிடலாம் என்று சொல்லி, பரணியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். வெங்கடேஷ் வீட்டுக்கு வந்து ரத்னாவை கேட்க, ரத்னா வீட்டில் இல்லை என்ற விஷயம் தெரிய வந்ததும் சண்முகம் கோவப்பட்டு அவர்களிடம் சண்டை போடுகிறார். பின், ரத்னா காணாமல் போன விஷயம் வைகுண்டம் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் தெரிய வர, எல்லோரும் ஒன்று சேர்ந்து ரத்னாவை தேடத் தொடங்குகின்றனர்.
அண்ணா சீரியல் :
கடைசியில், ரத்னாவை எங்கு தேடியும் கிடைக்காமல் குடும்பத்தினர் பதறிப் போய் இருக்கிறார்கள். இதையடுத்து, சண்முகத்திற்கு போலீஸ் ஒருவர் கால் செய்து, கடலோரத்தில் ஒரு லேடிஸ் பர்ஸ் இருந்தது அதில் உங்கள் நம்பர் தான் இருந்தது என்று சொல்ல அனைவரும் பதறிப் போகிறார்கள். பின், அனைவரும் குடும்பத்தோடு கடற்கரைக்கு சென்று ரத்னாவை தேட, ரத்னாவின் செருப்பு மற்றும் கொலுசு கிடைக்கிறது.
கடந்த வாரம்:
அதனால், குடும்பத்தினர் அனைவரும் கடலைப் பார்த்து கதறி அழுது கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், வெங்கடேசன் குடும்பத்தினர் ஏதாவது பிரச்சனையாவதற்கு முன்பு ஊரை விட்டு போய் விடுவோம் என்று வீட்டை விட்டு வெளியே வர, போலீஸ் வந்து அவர்களை கைது செய்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் வெங்கடேசனின் குடும்பத்தை சண்முகம் அடித்து தும்சம் செய்து அழுது கொண்டிருக்கிறார். கடைசியில், ரத்னாவின் உடல் கடலோரமாய் ஒதுங்க, அங்கு இருப்பவர்கள் இந்த பெண்ணிற்கு மூச்சுப் பேச்சு இல்லை பாவம் யார் பெத்த பொண்ணோ என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரத்னாவின் உடலை பார்த்துவிட்டு அங்கிருந்தோர் போலீசுக்கு தகவல் சொல்ல, போலீசும் அங்கு வந்து விரைவில் ஆம்புலன்ஸை அழைத்து ரத்னாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். மறுபக்கம், சண்முகம் வீட்டில் அனைவரும் ரத்னாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார்கள். சண்முகம், ரத்னாவிற்கு என்ன பிரச்சனை என்று நான் கேட்டிருக்க வேண்டும் என்று அழ, பரணி குறிக்கிட்டு அவருக்கு ஆறுதல் சொல்ல, சண்முகம், பரணி மீது பயங்கரமாக கோவப்பட்டு எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்று திட்டுகிறார்.
சீரியல் ட்ராக் :
அப்போது கனி, அவர் தன் தாயாய் என்னும் மரத்திடம் பொய் தனது அக்கா ரத்னா குறித்து சொல்லி அழுது மயங்கி விழுகிறார். பின் விஷயம் தெரிந்து, பாக்கியம் சண்முகத்தின் வீட்டிற்கு வந்து அழுது, ரத்னாவிற்கு எதுவும் ஆகாது என்று அனைவருக்கும் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கனியின் உடம்பில் அவரது அம்மா சூடாமணி வந்து இறங்கி, ரத்னாவிற்கு எதுவும் ஆகவில்லை என்று ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கே போய் தேட சொல்லுகிறார். கடைசியில், சண்முகம் பதறிப் போய் அந்த இடத்திற்கு போய் ரத்னாவின் புகைப்படத்தை காட்டி விசாரிக்க, அங்கிருந்தோர் இந்தப் பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது, போலீஸ் வந்து கொண்டு போய் விட்டார்கள் என்று கூற சண்முகம் அங்கேயே மயங்கி விழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.