கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. இப்படி ஒரு நிலையில் சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

அதே போல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ உள்ளிட்ட சீரியல்கள் இனி ஒளிபரப்பப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.இப்படி நிலையில் ஜீ தொலைக்காட்சி வாரத்தில் 7 நாளும் சீரியலை ஒளிபரப்ப இருப்பதாக ஜீ தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜீ தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துளதாவது,  நாளை முதல் ப்ரியாராமன் தொகுத்து வழங்கும் ‘ஜீன்ஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சி, இயக்குநர் கரு.பழனியப்பன் வழங்கும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பைத் தொடங்குகிறோம். இதனைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் குறித்து விரைவில் அறிவிப்பு இருக்கும் என்று கூறியுள்ளனர்.

Advertisement
Advertisement