சாமுண்டீஸ்வரி அடியாளாக வீட்டுக்குள் நுழைந்த கார்த்திக், காரணம் என்ன? - விறுவிறுப்பில் கார்த்திகை தீபம் 2

By krithika · 19/11/2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம், சாமுண்டீஸ்வரி கார்த்திகை தனக்கு கீழே வேலை செய்ய வைக்க வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் இடம் இது குறித்து சந்திரா கலா பேசுகிறார். ஆனால், கார்த்திக் திமிர் பிடித்த சாமுண்டீஸ்வரி கிட்ட வேலை பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறார்.

பின், சாமுண்டீஸ்வரியின் பிஏ சந்திரகலா சிவனாண்டியை சந்திக்கிறார். இறுதியில் சிவனாண்டி மனைவிதான் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை வேவு பார்ப்பதற்காக தான் அவரிடம் இருக்கிறார் என்று தெரிகிறது. அதோடு சிவனாண்டியின் காலில் விழுந்து இந்த ஊரில் சாமுண்டீஸ்வரி வைத்தது தான் சட்டமாக இருக்கிறது. நீங்க எப்போதும் இரண்டாவது இடத்தில் தான் இருக்கீங்க. அதை நினைச்சு எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

கார்த்திகை தீபம் 2:

நாம் முதலிடத்தை பிடிக்க இப்ப ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது. இந்த ஊரில் கார்த்திக் என்று ஒருத்தன் வந்திருக்கிறான். அவன் சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்தி விட்டான். அதனால், கார்த்திக்கை சாமுண்டீஸ்வரி அடிமையாக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நீங்க போய் அவன்கிட்ட பேசுங்க என்று கணவனை சந்திரகலா ஏவி விடுகிறார். பின் நேற்று, சிவனாண்டியின் ஆட்கள் சாமுண்டீஸ்வரியை கத்தியால் குத்த வர, அவர் துப்பாக்கியை கையில் எடுக்க இருவருக்கும் இடையே நடக்கும் தகராறில் துப்பாக்கியை தள்ளிவிட்டு சாமுண்டீஸ்வரியை அவர்கள் குத்த வருகின்றனர்.

நேற்று எபிசொட்:

அப்போது கார்த்திக் இடையில் புகுந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுகிறார். ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே பெரிய சண்டை நடக்கிறது. பின், சிவனாண்டி கார்த்திக்கை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சொல்ல, கார்த்திக் முடியாது என மறுக்கிறார். பிறகு சந்திரகலா மற்றும் சிவனாண்டி திட்டம் ஒன்றை போடுகின்றனர். பின், திடீரென சாமுண்டீஸ்வரி வீட்டில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. வீட்டிற்குள் ரவுடிகளை இறக்கி சாமுண்டீஸ்வரியை குத்த சொல்கிறார் சிவனாண்டி.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், யாரோ ஒருவர் வீட்டுக்குள் நுழைய, சாமுண்டீஸ்வரி துப்பாக்கியுடன் நிற்கிறார். அப்போது அங்கு கார்த்திக் வந்தது நிற்க, ரேவதி, நீ எதுக்கு வந்த என்று கேள்வி கேட்கிறார். கார்த்திக், வேலைக்கு சேர சம்மதம் சொல்ல தான் வந்தேன், நீங்க எதுக்கு போலித் துப்பாக்கி வச்சுட்டு நின்னுட்டு இருக்கீங்க என்று சாமுண்டீஸ்வரியை கலாய்க்கிறார். அதற்கு சாமுண்டீஸ்வரி உன்னை அப்படி எல்லாம் வேலைக்கு எடுக்க முடியாது சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு, கார்த்திக் நான்தான் உங்க எல்லாரையும் இன்டர்வியூ பண்ணி வேலைக்கு சேர்வேன் என்று செக் மேட் வைக்கிறார். அதற்குப் பிறகு ஒவ்வொருத்தராக கூப்பிட்டு கார்த்தி கேள்விகளை கேட்க கடைசியாக கார்த்திக் ஸ்வேதா மூலமாக தான் வீட்டுக்குள் நுழைய காரணம் என தெரிகிறது. கடைசியாக கார்த்திக் சந்திர கலாவை விசாரிக்க கூப்பிடுகிறார். இப்படியான நிலையில் அடுத்த நடக்கப்போவது என்ன என்ற விறுவிறுப்புடன் கார்த்திகை தீபம் 2 சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full