மீண்டும் மீண்டும் வரும் ஆபத்து, சம்முண்டீஸ்வரியை காப்பாற்றிய கார்த்திக் - விறுவிறுப்பில் 'கார்த்திகை தீபம் 2'

By krithika · 18/11/2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், தற்போது புதிய கதைக்களத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம், கார்த்திக் தனது அத்தை மாமாவை பார்க்க செல்கிறார். அங்கு தன் அத்தை சாமுண்டீஸ்வரி சார்பில் சிலம்பாட்டம் போட்டியில் பங்கேற்று வென்றார். பின், சாமுண்டீஸ்வரி கார்த்திக்கு 15 செயினை பரிசாக கொடுக்க, கார்த்திக் அதை நிராகரிக்கிறார்.

பின், சாமுண்டீஸ்வரியின் முதல் மகள் காட்டப்படுகிறார். அவரை மயில்வாகனம் என்பவர் பின் தொடர்ந்து வந்து கையை பிடித்து இழுக்க, அங்கிருந்தோர் மயில்வாகனத்தை அடிக்க சென்றனர். அப்போது சாமுண்டீஸ்வரரின் மகள் அது என் கணவர் என்று தடுத்து நிறுத்துகிறார். இன்னொரு பக்கம் சாமுண்டீஸ்வரியின் கடைசி மகள் ஸ்வேதா திருவிழாவில் பாட்டு பாட, ஸ்வேதா பாடினால் சாமுண்டேஸ்வரிக்கு பிடிக்காது என ராஜராஜன் மற்றும் மயில்வாகனம் சாமுண்டீஸ்வரிடம் மறைத்து விடுகிறார்கள்.

கார்த்திகை தீபம் 2:

அதற்குப் பின் சாமுண்டீஸ்வரி கார்த்திகை தனக்கு கீழே வேலை செய்ய வைக்க வேண்டுமென்று சொல்ல, கார்த்திக்கிடம் இது குறித்து சந்திரகலா பேசுகிறார். ஆனால், கார்த்திக் திமிர் பிடித்த சாமுண்டீஸ்வரி கிட்ட வேலை பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறார். பின், சாமுண்டீஸ்வரியின் பிஏ சந்திரகலா சிவனாண்டியை சந்திக்கிறார். இறுதியில் சிவனாண்டி மனைவிதான் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை வேவு பார்ப்பதற்காக தான் அவரிடம் இருக்கிறார் என்று தெரிகிறது.

போன வாரம்:

அதோடு சிவனாண்டியின் காலில் விழுந்து இந்த ஊரில் சாமுண்டீஸ்வரி வைத்தது தான் சட்டமாக இருக்கிறது. நீங்க எப்போதும் இரண்டாவது இடத்தில் தான் இருக்கீங்க. அதை நினைச்சு எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நாம் முதலிடத்தை பிடிக்க இப்ப ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது. இந்த ஊரில் கார்த்திக் என்று ஒருத்தன் வந்திருக்கிறான். அவன் சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்தி விட்டான். அதனால், கார்த்திக்கை சாமுண்டீஸ்வரி அடிமையாக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நீங்க போய் அவன்கிட்ட பேசுங்க என்று கணவனை சந்திரகலா ஏவி விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், சிவனாண்டியின் ஆட்கள் சாமுண்டீஸ்வரியை கத்தியால் குத்த வர, அவர் துப்பாக்கியை கையில் எடுக்க இருவருக்கும் இடையே நடக்கும் தகராறில் துப்பாக்கியை தள்ளிவிட்டு சாமுண்டீஸ்வரியை அவர்கள் குத்த வருகின்றனர். அப்போது கார்த்திக் இடையில் புகுந்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுகிறான். ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே பெரிய சண்டை நடக்கிறது.

சீரியல் ட்ராக்:

பின், சிவனாண்டி கார்த்திக்கை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வேலை செய்யுமாறு சொல்ல, கார்த்திக் முடியாது என மறுக்கிறார். பிறகு சந்திரகலா மற்றும்சிவனாண்டி திட்டம் ஒன்றை போடுகின்றனர். பின், திடீரென சாமுண்டீஸ்வரி வீட்டில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. வீட்டிற்குள் ரவுடிகளை இறக்கி சாமுண்டீஸ்வரியை குத்த சொல்கிறார் சிவனாண்டி. இப்படியான நிலையில், மீண்டும் கார்த்திக் சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுவாரா, அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்ற விறுவிறுப்புடன் கார்த்திகை தீபம் 2 சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full