அம்மாவை எதிர்த்து அப்பாவுக்கு ரேவதி சொன்ன அட்வைஸ், ஒட்டு கேட்ட கார்த்திக்- விறுவிறுப்பில் கார்த்திகை தீபம் 2

By krithika · 21/11/2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'கார்த்திகை தீபம்' ஒன்று. சமீபத்தில் தான் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம், யாரோ ஒருவர் வீட்டுக்குள் நுழைய, சாமுண்டீஸ்வரி துப்பாக்கியுடன் நிற்கிறார். அப்போது அங்கு கார்த்திக் வந்தது நிற்க, ரேவதி, நீ எதுக்கு வந்த என்று கேள்வி கேட்கிறார். கார்த்திக், வேலைக்கு சேர சம்மதம் சொல்ல தான் வந்தேன், நீங்க எதுக்கு போலித் துப்பாக்கி வச்சுட்டு நின்னுட்டு இருக்கீங்க என்று சாமுண்டீஸ்வரியை கலாய்க்கிறார்.

அதற்கு சாமுண்டீஸ்வரி, உன்னை அப்படி எல்லாம் வேலைக்கு எடுக்க முடியாது சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். கார்த்திக், நான்தான் உங்க எல்லாரையும் இன்டர்வியூ பண்ணி வேலைக்கு சேர்வேன் என்று செக் மேட் வைக்கிறார். அதற்குப் பிறகு ஒவ்வொருத்தராக கூப்பிட்டு கார்த்தி கேள்விகளை கேட்க, கடைசியாக கார்த்திக் ஸ்வேதா மூலமாக தான் வீட்டுக்குள் நுழைய காரணம் என தெரிகிறது. கடைசியாக கார்த்திக் சந்திரகலாவை விசாரிக்க கூப்பிடுகிறார்.

கார்த்திகை தீபம் 2:

பின் நேற்று எபிசோடில், கார்த்திக் சந்திரகலாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்க ஒரு வழியாக அவர் சமாளித்து விடுகிறார். அதைத்தொடர்ந்து கார்த்திக் நாளைக்கு வந்து வேலையில் சேர்ந்து கொள்வதாக சொல்கிறார். பின் சந்திரகலா, சிவனாண்டியிடம் கார்த்திக் சாமுண்டீஸ்வரியிடம் வேலைக்கு சேர்ந்தது குறித்து சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார். சந்திரகலா, சாமுண்டீஸ்வரி இடம் கோவிலில் பெண் தெய்வங்கள் மட்டுமே உள்ளன. ஆண் தெய்வங்கள் இல்லை.

நேற்றைய எபிசொட்:

இது தவறாகி விடும் என ஒரு சாமியார் சொன்னதாக சொல்ல, சாமுண்டீஸ்வரி அதெல்லாம் பண்ண முடியாது. அப்படி சொன்னதே ஒரு ஆண் சாமியார் என அலட்சியம் செய்கிறார். இதையடுத்து, ஒரு பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்தவர, மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் அவரை தடுக்கிறார்கள். ஆனால், அவர் இது என் குடும்பப் பிரச்சனை என மீசையை முறுக்க, சாமுண்டீஸ்வரி அவரை எட்டி உதைக்கிறார். பின், என் முன்னாடியே மீசையை முறுக்கறியா என ஆவேசப்பட, சாமுண்டீஸ்வரி ஆட்கள் அவனை கட்டிப்போட்டு அவன் மீசையை வழித்து விடுகிறார்கள்.

இன்றைய எபிசொட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரேவதி தன் தாய் சாமுண்டீஸ்வரி செய்வதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு, நீங்க எதுக்கு அவங்களுக்கு அடி பணிந்து போறீங்க, அம்மாவை கேள்வி கேட்டு அவங்கள திருத்துங்கப்பா என்று தனது தந்தை ராஜராஜனிடம் எடுத்து சொல்கிறார். அதற்கு ராஜராஜன், எவ்வளவோ முயற்சி பண்ணியாச்சு என்று தன் வருத்தத்தை பதிவு செய்கிறார். அதன் பின், ஸ்வேதா கார்த்தி இடம் ஒரு பாடலை பாடி காட்டுகிறார். கார்த்திக், மெதுவா பாடுங்க உங்க அம்மாக்கு கேட்க போகிறது என்று ஸ்வேதாவை எச்சரிக்கிறார்.

சீரியல் ட்ராக் :

இது ஒரு பக்கம் இருக்க சிவனாண்டி, கார்த்திக்கின் தாத்தா ராஜசேதுபதிக்கு எதிரான விரும்பனை கூட்டி வந்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் அனுப்பி வைக்க திட்டம் போடுகிறார். மேலும், அந்த வீட்டுக்குள் போகும்போது கொஞ்சம் பார்த்து தான் போகணும், ஏனென்றால் அந்த வீட்ல இருக்கவங்களுக்கு ஆம்பளையை பார்த்தாலே பிடிக்காது என்ற விருமனிடம் சிவனாண்டி சொல்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் போடுவதை கார்த்திக் மறைந்திருந்து பார்த்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full