பச்சோந்தி, விஷக்கிருமி, நெகட்டிவ்ட்டி - சர்வைவர் போட்டியாளர்களுக்கு பட்டம் அளித்த இந்திரஜா.
சமீபகாலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்களின் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமாக நிகழ்ச்சிகளைக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஜான்சிபார் எனப்படும் டான்சானியா தீவு ஒன்றில் போட்டியாளர்கள் தங்கியிருக்க அங்கிருந்து ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் சர்வைவர். நடிகர் அர்ஜுன் முதல் முறையாக தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
முதலில் இந்த நிகழ்ச்சியில் 16 பேர்கள் கலந்து கொண்டு காடர்கள், வேடர்கள் என்று இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு சவால்கள் தொடங்கின. பின் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஸ்ருஷ்டி முதலில் வெளியேறினார். பின் இரண்டாவதாக காடர்கள் அணியில் இருந்து இந்திரஜா எலிமினேஷன் ஆனார். இந்நிலையில் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இந்திரஜா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் சர்வைவர் நிகழ்ச்சி குறித்தும், பிற போட்டியாளர்கள் குறித்தும் பேசி உள்ளார்.
அதில் அவர் கூறியது, உண்மையிலே இந்த நிகழ்ச்சியில் ரொம்ப நல்லவங்கனு யாரும் இல்லை. அவரவர்கள் அவங்க விளையாட்டில் கவனமாக இருக்கிறார்கள். யாரும் நல்லவங்க இல்லைங்க என்று கூறி பின்னர் பிற போட்டியாளர்களுக்கு இந்திரஜா பட்டம் கொடுத்து உள்ளார். அந்த பட்டம் இதோ…
https://www.youtube.com/watch?v=Kw6BiI-okxM
பச்சோந்தி-- ராம். ஒரு விஷயம் சொல்ல வேண்டாம் என்றால் அவர் வேணும் என்றே சொல்லுவது. எல்லோரிடமும் மாத்தி மாத்தி பேசுவார்.
முகக்கண்ணாடி--- விக்ராந்த். அவரிடம் நம்ம எப்படி நடந்துகிறோமோ அப்படியே நடப்பார். உண்மையிலே நல்ல மனிதர்.
பாய்சன், விஷக்கிருமி-- காயத்ரி, பார்வதி. இவர்கள் இருவரும் இடம் மிக ஜாக்கிரதையதாக இருக்கனும். பாம்பு மாதிரி இரெண்டு பேரும் செம்ம கிளவ்வர்.
மைக் செட், நான் தான் பெரிய ஆளு--- பார்வதி. எல்லோருக்கும் தெரியும்.
புள்ள பூச்சி --லேடி கேஷ். அமைதியாக அவங்க வேலையை செய்வாங்க. பாக்குறதுக்கே பாவமாக இருக்கும்.
சாது மிரண்டா-- சரவணன், லக்ஷ்மி பிரியா. இவர்கள் இருவரும் அவங்க வேலையை பார்ப்பார்கள். ஆனால், யாராவது தலையிட்டால் அவ்வளவு தான்.
நெகட்டிவ்ட்டி -- நாராயணன், அஞ்சத்தன். எப்பவும் இது வேண்டாம்,அது வேண்டாம் என்று சொல்லிட்டே இருப்பார்கள்.
கோல்டன் ஹார்ட் --யாருமே இல்லைங்க.