வள்ளியை சிக்க வைக்க வேதநாயகி போட்ட பிளான், காப்பாற்றினாரா வேலன்?- விறுவிறுப்பில் வள்ளியின் வேலன்

By krithika · 25/11/2024

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'வள்ளியின் வேலன்' ஒன்று. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஸ்ரேயா நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாகவும் துணையாக நிற்கும் வேலனின் கதைதான். கடந்த வாரம், காலேஜுக்கு சிறப்பு விருந்தினராக வந்த வேதநாயகி, ரத்தினவேல் அமைச்சராக இருப்பதற்கு தான்தான் காரணம் என்பது போல் தன்னை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து, பேச்சுப் போட்டியில் வள்ளி கலந்து கொள்ளும் போது, ரத்தினவேல் உள்ளே நுழைகிறார். அவரைப் பார்த்து வள்ளி சந்தோஷப்பட, வேதநாயகி ஷாக் ஆகிறார். பின், வள்ளி பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பேச ரத்தினவேல் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார். அப்போது வள்ளியும் தன் அப்பாவை பற்றி பெருமையாக பேசுகிறார். இதையடுத்து நடன போட்டி நடக்கிறது. அப்போது வள்ளியுடன் ஜோடியாக டான்ஸ் ஆட இருந்தவரை சரத் டீம் கடத்திவிட, வள்ளி செய்வதறியாது தவிக்கிறார்.

வள்ளியின் வேலன் :

பின், வள்ளியுடன் டான்ஸ் ஆட இருந்த சிவாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று வள்ளியிடம் வேலன் சொல்கிறார். அப்போது வள்ளியை கடைசி போட்டியாளராக டான்ஸ் ஆட அழைக்க, வேலன் வள்ளியுடன் சேர்ந்து ஆட, இவர்களின் ஆட்டத்தை பார்த்து அனைவரும் கைதட்டுகிறார்கள். இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரத்தினவேல் பரிசுகளை வழங்குகிறார். ஆனால், வள்ளிக்கு எந்த போட்டியிலும் பரிசு கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். அப்போது வேலனும் வள்ளிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் :

அந்த சமயம் பார்த்து, கல்லூரி முதல்வர் ஒரு சிறப்பு பரிசு இருக்கிறது, அதை பெறுபவர் வள்ளி ரத்தினவேல் பாண்டியன் என்ற அறிவிக்க, வள்ளி சந்தோஷப்படுகிறார். பின் தன் தந்தையிடம் பரிசை பெற்றுக் கொண்ட வள்ளி, சந்தோஷத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து, ரத்தினவேலுக்கும் கல்லூரி சார்பாக ஒரு நினைவு பரிசு கொடுக்க, அதில் இருக்கும் பொருட்களை பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார். கடைசியில், வள்ளித் தன் தந்தையிடம் பரிசு பெறும் புகைப்படத்தை வேலன் வள்ளிக்கு கொடுக்க, அவர் சந்தோஷத்தில் வேலனுக்கு நன்றி கூறுகிறார்.

இன்றைய எபிசொட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரத்தினவேலு, தனக்கு கடிதம் போடும் அந்த கல்லூரி மாணவிக்கு, கல்ச்சுரல் நிகழ்ச்சிக்கு நீ ஏன் வரவில்லை என்பது போல் கடிதம் எழுதி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து வேதநாயகி அங்கு வந்து, யாருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று ரத்தினவேலுவிடம் கேட்க, ஒரு பொண்ணுக்கு லெட்டர் எழுதிட்டு இருந்தேன். அந்த பொண்ணுக்காக தான் முதலமைச்சரோடு இருந்த மீட்டிங் கேன்சல் ஆன உடனே, நான் காலேஜ் ஃபங்ஷனுக்கு வந்தேன் என்று சொல்கிறார். பின், அந்த பெண்ணை பற்றி ரத்தினவேல் பெருமையாக பேச வேதநாயகி கோவம் அடைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

மேலும், இந்த லெட்டர் எல்லாம் நானே போஸ்ட் பண்ணி விடுகிறேன் என்று சொல்லி, அந்த லெட்டரில் இருப்பதை எல்லாம் ரத்தினவேலுக்கு தெரியாமல் வேதநாயகி படித்துப் பார்க்கிறார். அதோடு அந்த லெட்டரை கிழித்துப் போட்டுவிட்டு, வேதநாயகி வேறொரு லெட்டரில், 'கோவிலில் உனக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்திருக்கிறேன் அங்கு போய் பிரசாதம் வாங்கிக் கொள்' என்று ரத்தனவேலு எழுதியது போல் மாற்றி எழுதி வைத்துவிடுகிறார். கடைசியில் அந்த லெட்டரைப் படித்த சந்தோஷத்தில் வள்ளி கோவிலுக்குப் போக, வேதநாயகி மற்றும் ரஞ்சித் யார் அந்தப் பெண் என்று கண்டுபிடிப்பதற்காக கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வேலன் வந்து வள்ளியிடம், வேதநாயகி குறித்து உண்மையை சொல்லி அவரைக் காப்பாற்றுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full