மறைமுகமாக காதலை சொன்ன வள்ளி, வேலன் கொடுத்த பதில் - விறுவிறுப்பில் வள்ளியின் வேலன்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'வள்ளியின் வேலன்' ஒன்று. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஸ்ரேயா நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாகவும் துணையாக நிற்கும் வேலனின் கதைதான் இந்த வள்ளியின் வேலன். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேணுகா, வேலனை போட்டு படாத பாடுபடுத்தி இருந்ததார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், வள்ளி பேச்சு போட்டிக்கு தயாராக வேலனிடம் ஒரு லெட்டரை கொடுத்து சரியாக பேசுறேனா பாரு என வேலனை பார்த்து மறைமுகமாக காதலை சொல்வது போல் பேச, வள்ளி பேப்பரில் நீங்க பேசுற மாதிரி இல்லையே என வேலன் கேட்க, வள்ளி மரமண்டு என மனதுக்குள் திட்டுகிறாள்.
வள்ளியின் வேலன்:
அதை அடுத்து ஆனந்தி, கிளாசுக்கு போகலாம் என வள்ளியை கூட்டி செல்ல, மூன்று பேர் உள்ளே புகுந்து இவ மேல் தான் ஆசிட் அடிக்கணும் என வள்ளியை கை காட்ட, வேலன் ரவுடிகளை அடித்து யாருடா இப்படி செய்ய சொன்னது என கேள்வி கேட்க, ரஞ்சித் தான் என ரஞ்சித் பெயரை சொல்கின்றனர். உடனே வேலன், அவர்களை அடித்து வீட்டுக்கு அழைத்து வந்து, ரத்தினவேல் முன்னாடி நிற்க வைத்து உண்மையை சொல்லுடா என்று அதட்ட, அந்த ரவுடிகள் இவர் தான் மேடம் மேல் ஆசிட் அடிக்க சொன்னாரு.
இன்றைய எபிசொட்:
ஆனா, இப்போ ரஞ்சித் சார் தான் பண்ண சொன்னாருனு சொல்ல சொல்லி அடிக்கிறார் என மாத்தி பேசுகிறார்கள். எல்லோரும் வேலனை திட்ட ரத்தினவேல், வேலன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். வேலன், இது ஆசிட் தான், எல்லாரும் இதை செக் பண்ணி பாருங்க என்று அந்த ஆசிடை எடுத்துக் கொட்ட, அது வெறும் தண்ணீர் என்ன தெரிய வருகிறது. பின் ரத்தினவேல், எதுவாக இருந்தாலும் ஒரு முறைக்கு 10 முறை யோசித்து பண்ணு என்று வேலனை திட்டிவிட்டு உள்ள செல்கிறார். கடைசியில் வேலன் மற்றும் வள்ளி அதிர்ச்சியில் எதுவும் புரியாமல் நிற்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.