சதி செய்து கல்லூரிக்கு சீஃப் கெஸ்டாக வந்த வேதநாயகி, வேதனையில் வள்ளி- விறுவிறுப்பில் 'வள்ளியின் வேலன்'
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் 'வள்ளியின் வேலன்' ஒன்று. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சித்து மற்றும் ஸ்ரேயா நடித்து வருகிறார்கள். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாகவும் துணையாக நிற்கும் வேலனின் கதைதான் இந்த வள்ளியின் வேலன். இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், வள்ளி பேச்சு போட்டிக்கு தயாராக வேலனிடம் ஒரு லெட்டரை கொடுத்து சரியாக பேசுறேனா பாரு என வேலனை பார்த்து மறைமுகமாக காதலை சொல்வது போல் பேச, வள்ளி பேப்பரில் நீங்க பேசுற மாதிரி இல்லையே என வேலன் கேட்க, வள்ளி மரமண்டு என மனதுக்குள் திட்டுகிறாள்.
வள்ளியின் வேலன்:
அதை அடுத்து ஆனந்தி, கிளாசுக்கு போகலாம் என வள்ளியை கூட்டி செல்ல, மூன்று பேர் உள்ளே புகுந்து இவ மேல் தான் ஆசிட் அடிக்கணும் என வள்ளியை கை காட்ட, வேலன் ரவுடிகளை அடித்து யாருடா இப்படி செய்ய சொன்னது என கேள்வி கேட்க, ரஞ்சித் தான் என ரஞ்சித் பெயரை சொல்கின்றனர். உடனே வேலன், அவர்களை அடித்து வீட்டுக்கு அழைத்து வந்து, ரத்தினவேல் முன்னாடி நிற்க வைத்து உண்மையை சொல்லுடா என்று அதட்ட, அந்த ரவுடிகள் இவர் தான் மேடம் மேல் ஆசிட் அடிக்க சொன்னாரு.
நேற்றைய எபிசொட்:
ஆனா, இப்போ ரஞ்சித் சார் தான் பண்ண சொன்னாருனு சொல்ல சொல்லி அடிக்கிறார் என மாத்தி பேசுகிறார்கள். எல்லோரும் வேலனை திட்ட ரத்தினவேல், வேலன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். வேலன், இது ஆசிட் தான், எல்லாரும் இதை செக் பண்ணி பாருங்க என்று அந்த ஆசிடை எடுத்துக் கொட்ட, அது வெறும் தண்ணீர் என்ன தெரிய வருகிறது. பின் ரத்தினவேல், எதுவாக இருந்தாலும் ஒரு முறைக்கு 10 முறை யோசித்து பண்ணு என்று வேலனை திட்டிவிட்டு உள்ள செல்கிறார். கடைசியில் வேலன் மற்றும் வள்ளி அதிர்ச்சியில் எதுவும் புரியாமல் நிற்கிறார்கள்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், வள்ளி காலேஜ் கல்ச்சுரல் நிகழ்ச்சிக்காக புடவையில் தேவதை போல் மேல் இருந்து கீழே இறங்கி வருகிறார். அதைப் பார்த்து, வேலன் வாய் அடைத்து நின்று கொண்டிருக்கிறார். வள்ளியை தொடர்ந்து வந்த ரத்தினவேலிடம், வேலன், போலாமா என்று கேட்கிறார். அதற்கு, ரத்தினவேலு காலேஜ் ஒருபுறம் இருக்கு, கட்சி ஆபீஸ் ஒரு பக்கம் இருக்கு எப்படி ஒன்றாக போக முடியும் என்று கேட்கிறார். வேலன், நீங்க காலேஜுக்கு விருந்தினராக வருவீர்கள் என்று அம்மா தான் சொன்னாங்க என்று வேதநாயகியை கை காட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ரத்தினவேலு, இன்று முதலமைச்சருடன் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொல்லி தன் அக்காவை கல்லூரி விழாவுக்கு போக சொல்கிறார். அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த வள்ளியும் வேலனும், கல்லூரி முதல்வரிடம் ரத்தினவேலு வேறு வேலையாக இருக்கிறார் என்று சொன்னவுடன், கல்லூரி முதல்வர் வள்ளி இடம் வருத்தத்தோடு பேசுகிறார். பின் கல்லூரிக்கு வந்த வேதநாயகி, என் தம்பி ரத்தினவேலு தான் என்னை அவருக்கு பதிலாக அனுப்பி வைத்தார் என்று பெருமையாக மேடையில் பேசுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.