திடீரென 'சந்தியாராகம்' சீரியலில் இருந்து முக்கிய நடிகர் மாற்றம் - யாருன்னு நீங்களே பாருங்க
சந்தியாராகம் சீரியலில் இருந்து திடீரென முக்கிய நடிகர் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலுமே வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த வகையில் பிரபலமான தொடர்களில் ஒன்று தான் சந்தியா ராகம். இந்த தொடர் அக்கா-தங்கை பாச கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியல் 300 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. சீரியலில் எதிர்பாராத விதமாக அக்காவுக்கு பார்த்த மாப்பிளையை தங்கை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அக்கா- தங்கைக்கிடையே பிரிவு ஏற்படுகிறது. பிரிந்து இருந்தாலுமே ஒருவருக்கு ஒருவர் பாசமாகத்தான் இருந்தார்கள்.
சந்தியாராகம் சீரியல்:
அப்போது தங்கைக்கு கேன்சர் நோய் வந்ததால் அவர் இறந்து விடுகிறார். தங்கையின் மகள் மாயாவை பார்க்கும் பொறுப்பை அக்கா ஜானகி ஏற்கிறார். பல கஷ்டங்களுக்கு பின் மாயாவை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார் ஜானகி. பின் வீட்டில் உள்ள எல்லார் மாயா இடம் பிடிக்கிறார். இப்படி இருக்கும் தருணத்தில் தான் மாயா, தனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதில் தனத்தை திருமணம் செய்ய இருந்தவர் கெட்டவர் என்று மாயாவுக்கு தெரிய வந்தது.
சீரியல் கதை:
இதனால் தனத்திற்கு கதிரை திருமணம் செய்து வைத்தார் மாயா. இதனால் கதிர், மாயாவை வீட்டில் உள்ள எல்லோருமே வெறுக்கிறார்கள். மாயா செய்தது சரி என்று ஜானகி புரிந்து கொள்கிறார். பின் மாயாவிற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தனத்திற்கும் தெரிந்து தன்னுடைய அக்காவிடம் மன்னிப்பு கேட்கிறார். இன்னொரு பக்கம் தனத்தை அடைய அவருடைய காதலர் தொல்லை செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஜானகி அவனை கொலை செய்து விடுகிறார். இனி அடுத்து என்ன? நடக்கப் போகிறது என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.
சீரியலில் விலகிய நடிகர்கள்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் அடுத்தடுத்து பிரபலங்கள் வெளியேறி இருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. முதலில் இந்த சீரியல் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே தாரா வெளியேறி இருந்தார். அதற்குப் பிறகு சீரியல் நேரம் மாற்றம் செய்திருந்தார்கள். அதற்குப்பின் கடந்த ஒரு மாதத்திற்குள்ளே மூன்று நடிகர்கள் மாறியிருந்தார்கள். பிக் பாஸ் மணிகண்டன் உடைய மனைவியும், நடிகையுமான சோபிதா வெளியேறி இருந்தார்.
நடிகர் மாற்றம்:
இவரை அடுத்து சில தினங்களிலேயே நடிகர் நவீன் இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். ஆனால், இவர் வெளியேறுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தற்போது சீனு கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்த சுர்ஜித் குமாரும் சீரியல் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இவருடைய விலகல் பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவர் சீரியலை விட்டு கடந்த மாதமே வெளியேறிவிட்டார். இருந்தாலுமே சீரியலில் இவர் வெளியூர் சென்றிருப்பதாக காண்பித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சீனு கதாபாத்திரத்தில் புது நடிகர் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். மனோஜ் பிரபு என்பவர் தான் நடித்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு youtube தொடர்களில் நடித்திருந்தார்.