ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை டெலிவரி பாய்க்கு குவிந்த ஆதரவு - புகார் அளித்த பெண் போட்ட பதிவு.

By Rajkumar · 19/3/2021

சமூக வலைதளத்தில் பரவும் செய்தி எப்போதும் உண்மை இல்லை. அதற்கு எப்போதும் இரண்டு முகங்கள் இருக்கும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் ஒருவர் வீடியோ ஒன்றில் பேசி இருந்தார். அதில் பேசிய அந்த அந்த பெண், கடந்த மார்ச் 9ஆம் தேதி தன்னுடைய அப்பார்ட்மெண்டில் இருந்தபோது 15:20 அளவில் உணவை ஜுமாடோ ஆர்டர் செய்திருந்தேன். ஆனால், ஒரு மணி நேரம் கழித்தும் ஆர்டர் வந்து சேராததால் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தன்னுடைய ஆர்டரை கேன்சல் செய்யுமாறும் அல்லது தனக்கு அதற்கான பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

https://www.youtube.com/watch?v=7rdOsng3NGg

இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது டெலிவரி நபர் வந்து சேர்ந்தார். அவரை நான் காத்திருக்க சொன்ன போது அவர் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசி 'நான் என்ன உன் அடிமையா என்ன ? என்று கூச்சல் போட்டார். இதனால் நான் என்னுடைய கதவை சாத்த முற்பட்டபோது அவர் கதவை தள்ளி உள்ளே நுழைந்து என்னுடைய மூக்கில் தாக்கி விட்டு சென்றுவிட்டார். இவ்வாறாக அந்தப்பெண் கூறியிருந்தார். சமூகவலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவ சம்பந்தப்பட்ட அந்த டெலிவரி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த நபரும் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு நிலையில் போலீசிடம் அந்த டெலிவரி நபர் வேறு சில ஷாக்கான சம்பவத்தை கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்ட அந்த பெண் தான் தன்னிடம் அசிங்கமாக பேசியதாகவும் மேலும் தன்னை அவர் செருப்பால் அடித்ததாகவும் கூறியுள்ளார். அப்படி அவர் தன்னை அடிக்கும்போது தற்காப்பிற்காக தான் தடுத்ததாகவும் அப்போது அவருடைய கையாலேயே அவருடைய முகத்தில் முடித்துக்கொண்டார் என்றும் அந்த நபர் கூறி இருந்தார்.

காமராஜுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்களும் சமூக வலை தளத்தில் பதிவிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் காமராஜ் அளித்த புகாரின் பேரில் பெங்களூர் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், இந்த பிரச்சனை எழுந்த நாளில் இருந்து எனக்கு வாட்ஸ் அப், இ - மெயில், மெசஞ்சர், என்று பலவற்றிலும் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. நான் பல வருடங்களாக பெங்களூரில் தான் இருக்கிறேன். ஆனால், இந்த பிரச்சனைக்கு பின்னர் எனக்கு இங்கு இருக்கவே பயமாக இருக்கிறது. பலரும் நான் இலவசமாக உணவை கேட்டதாக சொல்கிறார்கள். ஆனால், உன்மையில் உணவு தாமதமாக வந்ததால் Zomato தான் எனக்கு இலவச உணவு தருவதாக கூறியது.

உண்மை தெரியாமல் பல பிரபலங்களும் எனக்கு எதிராக பேசுவது வேதனை அளிக்கிறது. நான் சட்டத்தை பதிப்பவள், நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த பிரச்சனை முடியும் வரை நான் எங்கேயும் போக மாட்டேன். தயவு செய்து இந்த விசயத்தில் விசாரணைக்கு பின் என்ன முடிவு வருகிறது என்று தெரியும் வரை இதுகுறித்து ஏதும் பேசாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full