தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இந்த திறமை இருக்கா..? அசந்துபோய் மேடையில் பாராட்டிய நடுவர்கள் !

0
1446
Priyanka Actress

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான்.விஜய் டிவி யில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கு பெற்று வருகிறார். அதில் இவரின் சிரிப்புக்கு என்றெ பல ரசிகர்கள் உள்ளனர்.

Anchor priyanka

மேலும் குழந்தைகள் பங்கு பெற்று வரும் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பெற்று வரும் இவர் மற்றவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வார். எப்போதும் இவரை தீனிப்பண்டாரம் என்று கிண்டல் செய்து வந்தவர்களுக்கு தனது திறமை மூலமாக பதிலடி கொடுத்துள்ளார் பிரியங்கா.

சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே என்ற படத்தில் இருந்து ஒரு பாடலை பாடியுள்ளார். இவரது பாடலை கேட்டு மெய் சிலிர்த்து போன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலன் நடுவர்களாக உள்ள பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா, அனுராதா போன்ற அனைவரும் மேடைக்கு வந்து உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.