பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

0
1208
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் குமரன் – சித்ரா நடித்து வந்த கதிர் – முல்லை கதாபாத்திரத்தாம் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று வேண்டும்.

இதையும் பாருங்க : தான் நடித்த மாஸ்டர் படத்தை பார்க்காமலேயே உயிர் இழந்த கைதி பட நடிகர் – லோகேஷ் கனகராஜ் போட்ட ட்வீட்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த சீரியல் தற்போது இந்தியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற அதே பெயரில் இந்த சீரியல் இந்தியில் ரீ -மேக் செய்யபட்டுள்ளது. சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. மற்ற மொழிகளை போலவே இந்தியிலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபபடுகிறது . இதன் மூலம் இந்தியில் ரீ – மேக் செய்யப்பட்ட தமிழ் சீரியல் என்ற பெருமையை பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

-விளம்பரம்-
Advertisement