உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் – புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

0
9407
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் நடிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.ஒரு காலத்தில் ஜீ தொலைக்காட்சி சேனல் நம்பர் என்ன என்பது கூட தொலைக்காட்சி ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், சமீப காலமாக தொலைக்காட்சி ரசிகர்கள் பலரும் ஜீ தமிழ் தொழிகாட்சியின் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே தற்போது இந்த தொலைகட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு புதிய தொடர்கள் தான்.அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் கடந்த 2018 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தது.இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ரேஷ்மா இளசுகளையும் கவர்ந்துள்ளார்.

இதையும் பாருங்க : புத்தாண்டு தினத்தன்று மகளின் புகைப்படத்தை பதிவிட்டு விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ். என்ன இப்படி வளந்துட்டாரு.

- Advertisement -

கேரளாவை சேர்ந்த இவர் சென்னையில் தான் வளர்த்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை ரேஷ்மா, இதே சீரியலில் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் காதலில் விழுந்துள்ளார். நடிகர் மதன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் ஒருவருக்கொருவரை காதலிப்பதாக தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து மதன் கூறுகையில் பொதுவாக அனைவரும் புத்தாண்டிற்கு ஏதாவது தீர்மானம் எடுப்பார்கள். அந்த வகையில் நானும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லி என்னுடைய ரசிகர்களுக்கும் ரேஷ்மாவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதனால் தான் கொஞ்சம் காத்திருந்து சரியாக புத்தாண்டு பிறந்த அந்த நிமிடத்தில் என் கல்யாண செய்தியை அறிவித்தோம்.

-விளம்பரம்-
Advertisement