தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல் இயக்கி, நடித்த படம் ‛ஹேராம். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஷாரூக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். காந்தியை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் பின்னணி என பரபரப்பை கிளப்பிய படம் இது. சில சர்ச்சைகள் இருந்தாலும் படத்தை கமல் இயக்கிய விதம் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படம் வெளியாகிநேற்றோடு (பிப் 18) 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் செய்திருந்த நிலையில் கமல் ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், ஹேராம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை சரியான நேரத்தில் நாங்கள் எடுத்தோம் என்பது மகிழ்ச்சி. அந்தப்படம் பேசிய அச்சங்களும், எச்சரிக்கைகளும் உண்மையாகி வருவது வருத்தமே. நமது நாட்டின் நல்லிணத்திற்காக இந்த சவால்களை வெல்ல வேண்டும். நாம் வெல்வோம். நாளை நமதே என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

கமல் எத்தனையோ படங்களை தயாரித்திருக்கிறார் அதில் சில வெற்றிப்படங்களும் இருக்கிறது சில தோல்வியும் அடைந்துள்ளது.மேலும் அவரது மருதனாயாகம் படம் கூட எவ்வளவோ பொருட்செலவில் உருவாகி பின்னர் கைவிடப்பட்டது இதனால் கமலுக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது.அந்த படத்திற்கு பிறகு கமல் தனது நஷ்டத்தை எடுசெய்துகொள்ள பல்வேறு படங்களில் நடித்து வந்தார்.

இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையில் தான் ஹேராம் படமும் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் ஷாருகான் கோடி கணக்கில் சம்பளம் பெற்றார் என்றும் அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் ஷாரூக்கான் சம்பளம் என்ன என்பதை கமல் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஷாருக்கான் ஒரு பிசினஸ்மேன் என்று பலரும் கூறுவார்கள் நானும் அப்படி தான் சொல்லுவேன். ஆனால், ஹேராம் படத்தில் பட்ஜெட் என்ன என்பது ஷாருக்கானுக்கு தெரியும். மேலும், அவர் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதை மட்டும்தான் நினைத்தார். அதேபோல இந்த படத்தின் ஹிந்தி உரிமையையும் அவர் வாங்கிக் கொண்டார். ஆனால், இந்த படத்துக்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை. மாறாக அவருக்கு நான் ஒரே ஒரு கைக்கடிகாரத்தை மட்டும் தான் பரிசாக அளித்து இருந்தேன் என்று கூறியுள்ளார் கமல்.

Advertisement
Advertisement