2019 ஆம் ஆண்டிற்கான SIIMA விருது பட்டியில்.! எங்கப்பா நயன்தாராக்கு விருதை காணோம்.!

0
2484
Siima
- Advertisement -

தென் இந்திய சினிமா பிரபலங்களுக்கான அங்கீகாரம்தான் சைமா விருது விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 8வது ஆண்டாக சைமா விருதுகள் விழா கோலாகலமாக துவங்கியது. நேற்று(ஆகஸ்ட் 16) முதல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
 நேற்று முதல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

திரையுலகில் மதிப்புமிக்க சைமா விருதுகளை தமிழ் சினிமாவில் இருந்து 2109 ஆம் ஆண்டில் தனுஷ் இயக்குநர் பாண்டிராஜ் முதலானோர் வென்றுள்ளனர் . மேலும், கன்னட படமான கேஜிஎஃப் படத்தில் நடித்த யாஷ் சிறந்த நடிகருக்கான விருது வாங்கியுள்ளார்.

இதையும் பாருங்க : கழிவறையில் அரைகுறை ஆடையில் அனேகன் பட நடிகை நடத்திய போட்டோ ஷூட்.!

- Advertisement -

அவரைத் தொடர்ந்து விஜய் தேவர கொண்டாவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல முன்னனி நடிகர்களும் விருதுகளைக் குவித்துள்ளனர். கத்தாரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென் இந்திய நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். இதில் பல்வேறு தமிழ் பிரபலங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் தமிழ் சினிமா பிரபலன்களான தனுஷ், அனிருத், வரலக்ஷ்மி சரத்குமார், ஐஸ்வ்ர்யா ராஜேஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் விருதுகளை பெற்றுள்ளனர். தமிழ் சினிமா துறையில் விருதுகளை பெற்ற பிரபலங்களின் பட்டியில் பின்வருமாறு.

-விளம்பரம்-

விருது பட்டியில் :

  • சிறந்த படம் – பரியேறும் பெருமாள் 
  • சிறந்த இயக்குனர் – பாண்டிராஜ் ( கடைக்குட்டி சிங்கம் ) 
  • சிறந்த நடிகர் – தனுஷ் ( வட சென்னை ) 
  • சிறந்த நடிகர் விமர்சகர் விருது- ஜெயம் ரவி(அடங்கமறு ) 
  • சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா ) 
  • சிறந்த நடிகை விமர்சகர் விருது – த்ரிஷா ( 96 ) 
  • சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் ( 60 வயது மாநிறம் ) 
  • சிறந்த துணை நடிகை – ஈஸ்வரி ராவ் (காலா ) 
  • சிறந்த வில்லன் பாத்திரம் – வரல்ட்சுமி சரத்குமார் ( சர்கார் ) 
  • சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (கோலமாவு கோகிலா ) 
  • சிறந்த காமெடி – யோகிபாபு (கோலமாவு கோகிலா )
  • சிறந்த பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன் (நானா தானா – தானா சேர்ந்த கூட்டம்) 
  • சிறந்த பின்னணி பாடகர் – அந்தோணி தாசன் – சொடக்கு மேல (தானா சேர்ந்த கூட்டம் 
  • சிறந்த பின்னணி பாடகி – தீ (தீக்‌ஷிதா வெங்கடேசன் ) ரௌடி பேபி (மாரி 2) 
  • சிறந்த ஒளிப்பதிவாளர் – ஆர் டி ராஜசேகர் ( இமைக்கா நொடிகள் ) 
  • சிறந்த அறிமுக இயக்குநர் – நெல்சன் ( கோலமாவு கோகிலா ) 
  • அர்ப்பணிப்பு விருது – பாடலாசிரியர் நா முத்துக்குமார் 







Advertisement