ஷங்கர் மகள் அதிதி சங்கரை விட அதிக Followers – யார் இந்த 2k கிட் நிவேத்யா சங்கர்.

0
308
aditi
- Advertisement -

அதிதி சங்கரை விட நிவேத்யா சங்கர் சோஷியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்யும் தகவல் தற்போது பரவலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்திக். தற்போது கார்த்திக் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் விருமன். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக அதிதி சங்கர் அறிமுகமாகியிருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் வேற யாரும் இல்லைங்க, பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார். இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கு மொழி படத்தில் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதிதி விருமன் படத்திலும் மதுர வீரன் என்ற பாடலை பாடியிருக்கிறார். இந்த முதல் படத்திலேயே அதிதி இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகிறது.

- Advertisement -

இந்த நிலையில் அதிதியை விட சோஷியல் மீடியாவில் நிவேத்யா சங்கரை ரசிகர்கள் அதிகமாக பாலோ செய்யும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. டிக் டாக் என்ற ஒன்று தொடங்கிய காலத்திலிருந்தே 2k கிட்ஸ் சோசியல் மீடியாவில் பிரபலமாகி இருக்கிறார்கள். அதில் பல பேர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார்கள். பின் டிக் டாக் பேன் செய்த பிறகு பலரும் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சோஷியல் மீடியாவில் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நிவேத்யா சங்கர். இவர் இன்ஸ்டாவில் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இவர் கேரளாவில் உள்ள நெய்யட்டின்கராவில் பிறந்தவர். இவரின் தந்தை சங்கர், தாயார் ரெம்யா சங்கர் ஆவார். நிவேத்யா பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர் சோஷியல் மீடியாவில் வீடியோக்களை போடுவதற்கு அவருடைய பெற்றோர்களும் ஆதரவாக இருப்பதாக பேட்டியில் கூறியிருந்தார். மேலும், சிறு வயதில் இருந்தே நிவேத்யா நடனம் மற்றும் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். நிவேத்யா டிக்டாக்கின் மூலம் தான் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். ஆனாலும், இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு இவர் இன்ஸ்டாகிராமுக்கு தாவி விட்டார். 2019 ஆம் ஆண்டில் முதன் முதலாக இவர் வீடியோவை பதிவிட்டார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் இவரை 2.7 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். முன்னணி இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கரை விட நிவேத்யா சங்கர் தான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகமான பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அதிதியை 312k ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவரை விட 9 மடங்கு நிவேத்யாவை அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement