தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக திரை உலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். விஜய் ஆண்டனி அவர்கள் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார். 2012-ஆம் ஆண்டு வெளிவந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார்.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த ‘கொலைகாரன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜய் ஆண்டனி பேசுகையில், படத்தோட ஷூட்டிங் பாண்டிசேரி மற்றும் சென்னை ஏரியாவுல நடந்தது. சொல்லபோனா இந்தப் படத்துகாக பாண்டிசேரியோட ரிமோட் ஏரியாவுல பிச்சைக்காரங்களோட உட்கார்ந்து பிச்சை எடுத்திருக்கேன். முகம் முழுக்க கரியைப் பூசிக்கிட்டு பிச்சை கேட்டியிருக்கேன். நிறையப் பேர் தர்மம் பண்ணுனாங்க. கை கால் எல்லாம் நல்லாதானே இருக்கு. எதுக்கு இந்த பொழப்புனு’ திட்டிலாம் இருக்காங்க. இவங்க திட்டுனதுக்காக நான் வருத்தப்படலை. ஏன்னா, நிஜ வாழ்க்கையிலும் நான் பிச்சை எடுத்திருக்கேன்.

வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன். தொடர்ந்து ஆறு மாசம் வரைக்கும் சிலருடைய ஆபிஸ் வாசல்ல வாய்ப்பு பிச்சை கேட்டு நின்னுருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டுதான் இப்போ இந்த நிலையில இருக்கேன். இந்தப் படத்துக்கு சசி சார் முதல்ல ‘ம்’னு பேர் வெச்சிருந்தார். ஏன்னா, ‘அம்மா’வுடைய பேர்ல ‘ம்’ வரதுனால. ஆனா, நான் அடம் பிடிச்சு ‘பிச்சைக்காரன்’னு பேர் வைக்க சொன்னேன். இந்தப் பேருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. முக்கியமா, படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் நிறையப் பேர் தயங்குனாங்க. காரணம், படத்தோட பெயர். எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement