சாதிய வன்கொடுமையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்தும் நாங்குநேரி மாணவர் சின்னதுரை செய்திருக்கும் சாதனை தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கூலி தொழில் செய்கிறார். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.

மேலும், கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை சாதி வன்கொடுமை செய்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

Advertisement

நாங்குநேரி சம்பவம்:

இதனால் அந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் கண்டித்து இருக்கிறது. பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள். இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நாங்குநேரி போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தும் போலீஸ் வரவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவன்:

இதை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், இந்த சம்பவம் நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் போலீசும் தீவிர விசாரணை நடத்தி இருக்கிறது. படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் தங்கை இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. பின் போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள். இது குறித்து அவர் பெற்றோரிடமும் தலைமை ஆசிரியர் குறித்து கூறி இருக்கிறார்.

Advertisement

போலீஸ் விசாரணை:

இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவு தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். சாதி வன்மத்தால் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து இருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனங்களையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருத்தங்களையும் தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement

மாணவன் செய்த சாதனை:

இந்த நிலையில் மாணவன் சின்னதுரை அவர்கள் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 469 மதிப்பெண் பெற்று இருக்கிறார். தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, வணிகவியல்-84, கணக்குப் பதிவியல்-85, கணினி பயன்பாடு-94 எடுத்து இருக்கிறார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் மனம் தளராமல் படித்து மாணவர் சின்னதுரை சாதனை செய்து இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் மாணவர் சின்னதுரையின் உயர்கல்விக்கான மொத்த செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்பதாக அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மாணவனுடைய பள்ளி படிப்புக்கான செலவை பள்ளி கல்வித்துறை தான் ஏற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நெட்டிசன், ஜாதி வெறிய தூண்டிவிடும் நபரின் வாழ்த்து எனக்கு தேவை இல்லை என சின்னதுரை நினைப்பான் என்று பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

Advertisement