தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் என்று பல நடிகர்கள் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் 2019-ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. டெல்லியில் இன்று 67 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணைமந்திரி எல். முருகன் இவர்களுடன் விருதுபெறும் நபர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழா காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டது. இந்திய சினிமா வரலாற்றில் மிக உயரிய விருதாக ‘தாதா சாகேப் பால்கே’ விருது கருதப்படுகிறது. இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் 2019-ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. இன்று ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதே போல் அசுரன் படத்துக்காக தயாரிப்பாளர் தாணு மற்றும் இயக்குனர் வெற்றிவேல் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதையும் பாருங்க : இவங்களே குண்டு வைப்பார்களாம், இவங்களே எடுப்பாங்களாம் – பவானியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

Advertisement

இயக்குனர் வெற்றிமாறன் இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படம் பூமணி எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது. மேலும், தனுஷ் இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுகிறார். ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்று இருந்தார். இதனை தொடர்ந்து சிறந்த துணை நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றார். சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும், கண்ணான கண்ணே பாடலுக்காக இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர் பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக சிறந்த ஜூரி என்ற விருதையும், கேடி (எ) கருப்பு துரை என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர். இப்படி பல மொழி வாரியாக நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரஜினியை தொடர்ந்து அவருக்கு பின் அவர் மருமகன் தனுஷ் அமர்த்தி வைக்கப்பட்டார். அவருக்கு பின்னால் தனுஷ்ஷின் மகன்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு பின்னால் தான் விஜய் சேதுபதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

Advertisement
Advertisement