பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் பெண்களை மையமாக வைத்து வரும் படங்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் படங்களில் ஆண்களுக்கு பெரும் ஆதரவாளர்களாக தான் பெண்களை காட்டுவார்கள். ஆனால், பெண்களை மையப்படுத்தி ஆண்களை திருத்தி வந்த படங்கள் சிலவற்றையே. அதிலும் பெண்களை மறுவாழ்வு மையம் ஆக்கிய படங்கள் சில தான். அதில் தற்போது 8 படங்கள் பற்றி பார்ப்போம் தான் இங்கு பார்க்க போகிறோம்.


ஆதித்யா வர்மா:

Advertisement

தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தான் ஆதித்யா வர்மா. அனைத்து மொழியிலும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழில் துருவ் விக்ரம் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கதாநாயகியாக மகிமா நடித்திருந்தார். படத்தில் கதாநாயகி தன் காதலணுக்குகாக பல வகையில் போராடுகிறார்.

இதையும் பாருங்க : இதான் சீமான் Reference காட்சியா – இத பாத்துதான் சீமான் தம்பிகள் சூர்யா மீது காண்டானாகி இருகாங்க.

7ஜி ரெயின்போ காலனி:

Advertisement

இந்த படம் கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு இளைஞனை சுற்றி நடக்கும் கதை. அக்கறையின்றி அவரது தந்தையால் தூற்றப்படும் கதாநாயகனை கதாநாயகி எவ்வாறு திருத்தி அவரது வாழ்க்கையில் முன்னேற செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை. தன்னுடைய தந்தை மற்றும் பிறர் மதிக்கும் அளவிற்கு அவருடைய வாழ்க்கையை மாற்ற பல உதவிகள் கதாநாயகி செய்கிறார். இருப்பினும் கதை இறுதியில் கதாநாயகி இறந்து விடுகிறார்.

Advertisement

மயக்கம் என்ன:

இந்த படத்தில் தனுஷ் வனவிலங்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வலராக இருப்பார். திறமை இருந்தும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறாத நிலையில் கதாநாயகி போராடுகிறார். எல்லாவகையிலும் துணை நின்று அவரை உலக அளவில் விருது வாங்கும் அளவிற்கு உயர்த்துவார் கதாநாயகி. க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் வேற லெவல் என்று சொல்லலாம்.

சர்பட்டா பரம்பரை:

இந்த படம் சமீபத்தில் தான் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் ஹீரோ கபிலனின் மனைவி மாரியம்மாள் தைரியமான ஒரு பெண்மணியாக தன் கணவனுக்கு வரும் எல்லா பிரச்சனைகளையும் எதிர்த்து போராடி தன் கணவனுக்கு ஆதரவாக நிற்பார் .தவறான வழியில் செல்லும் தன் கணவரை திருத்தி சரியான பாதையில் அழைத்துச் செல்வார். பின் தன் கணவன் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி அடைய பல்வேறு விதமாக பக்கபலமாக இருந்து வெற்றி அடைய வைக்கிறார்.

சதுரங்க வேட்டை:

இந்த படத்தில் கதாநாயகன் பல கோல்மால் வேலைகளை செய்து பணம் சம்பாதிப்பார். பின் கதாநாயகி அவரை திருத்தி கூலி வேலை செய்தாலும், கஞ்சி குடித்தாலும் தன்னுடைய சொந்தப் பணத்தில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று மாற்றுவார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

சூது கவ்வும்:
இந்த படம் வெளிவந்து மக்கள் முதல் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. கற்பனை கதாநாயகியாக இருந்தாலும் கதை முழுவதும் ஹீரோவுடன் பயணித்து அவருக்கு உறுதுணையாக நின்று கடைசிவரை பக்கபலமாக போராடும் கதை.

ஆயுத எழுத்து:

படத்தில் முரட்டு தனமாக வாழும் மாதவனை மீரா ஜாஸ்மின் காதலிக்கிறார். பின் அவர் தன் காதலால் மாதவனை திருத்துகிறார். மாதவன் தன் மனைவியின் காதலை புரிந்து கொண்டு எல்லா தீய வழிகளையும் விட்டு விட்டு வாழ்வதை மையமாகக் கொண்ட கதை ஆகும்.

இறைவி:

எஸ் ஜே சூர்யா,விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கமலினி, அஞ்சலி போன்ற பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுவதும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். பெண்கள் தங்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளையும் சகித்துக் கொண்டு தைரியமாக வாழ்நாள் முழுதும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட கதை.

Advertisement