கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்று சென்று கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நடத்த சோகங்களையும் மறக்க முடியாத சம்பவங்கள் குறித்து கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஆரி பேசுகையில் தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள் ஆனால் நான்தான் படிப்பு வராமல் அப்படியே அழுத்தி கொண்டு இருந்தேன் அப்போது எனது தந்தை எனது சிறு பகுதியை விற்று ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்.

அதன் பின்னர் சென்னையில் ஒரு மஞ்சப் பையோடு வந்து இறங்கிய நான் பின்னர் சினிமாவில் எப்படியோ வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருந்த சமயத்தில் சேரன் மூலமாக எனக்கு பட வாய்ப்பு வந்திருந்தது . அப்போது சேரன் சாருக்கு நான் போன் செய்து இந்த படத்தில் எனக்கு என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன். அதற்கு அவர், ஏன் சொல்லி ஆகணுமா நீ தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னார். அந்த படத்தின் பெயர் ‘ஆடும் கூத்து’ அந்த படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை பெற்றது.

Advertisement

ஆனால் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. என்னுடைய முதல் படமே திரையரங்கில் வெளி வராமல் போனது மிகவும் வருத்தமான விஷயம் என்று கூறியிருந்தார் ஆரி. உண்மையில் ஆரி குறிப்பிட்ட இந்த படம் குறித்து தெரிந்திருக்க பலருக்கும் வாய்ப்பில்லை. இந்த படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. டிவி சந்திரன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் நவ்யாநாயர், சேரன், பிரகாஷ்ராஜ், சீமான் மனோரமா என்று பலர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்றாலும் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்குபெற்றது. அத்தோடு இந்த திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியாகினாலும் இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு ஒரு சில திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. பின்னர் இந்த திரைப்படத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இந்த படம் குறித்து ஏற்கனவே கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற தெருக்கூத்து டாஸ்கின் போது சேரன் கூட குறிப்பிட்டு இருப்பார்.

Advertisement
Advertisement