இப்படி ஆகும்னு எதிர்பார்க்கவே இல்ல - CSK மேட்ச் இடையே வைரலான தனது புகைப்படம் குறித்து சன் டிவி சீரியல் நடிகை.

By subhashini · 4/5/2024

ஐபிஎலில் சிஎஸ்கே விளையாடும் போது சீரியல் நடிகை தர்ஷனா கொடுத்திருந்த ரியாக்ஷன் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் சில மாதங்களுக்கு முன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. கலை நிகழ்ச்சிகளுடன் இரவு 8 மணிக்கு துவங்கிய இந்த தொடரின் 8 போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணி மோதியது.

View this post on Instagram

A post shared by memeskirukkan (@memeskirukkan)

ஒவ்வொரு அணியும் நன்றாக விளையாடி வருகிறது. ஆனால், சென்னை அணி இந்த முறை கொஞ்சம் சொதப்பி இருக்கிறது. மேலும், இந்த போட்டியை காண ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சி எஸ் கே மற்றும் பஞ்சாப் அணி இடைகளுக்கான போட்டி நடைபெற்றது. இதை நேரில் காண சீரியல் நடிகை தர்ஷனா சென்றிருக்கிறார்.

தர்ஷனா புகைப்படங்கள்:

அதில் அவர் கொடுத்த ரியாக்ஷன் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .அவர் சிஎஸ்கே விளையாடும் போது ஷாக், சந்தோசம் போன்ற பல ரியாக்சன்களை அழகாக கொடுத்து இருக்கிறார். அதை சூப்பராக புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். அது மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இது குறித்து தர்ஷனா, இந்த புகைப்படங்கள் இந்த அளவிற்கு டிரெண்டாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

View this post on Instagram

A post shared by Senjuta Pochu (@senjuta.pochu.official_)

தர்ஷனா பேட்டி:

காலையில் எழும்போதே என்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு நிறைய கமெண்ட்ஸ் வந்தது. எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சிஎஸ்கே என்னுடைய பேவரட். கடைசி சிஎஸ்கே வெஸ் லக்னோ மேட்ச் பார்ப்பதற்காக நான் போனேன். ஆனால், அப்போ நாம் மேட்ச்சில் தோற்று விட்டோம். அதனால் சமீபத்தில் பஞ்சாப் அணி உடன் மோதின மேட்சை பார்த்தே தீர வேண்டும் என்று போனேன். என்னால் சீட்டில் உட்காரவே முடியவில்லை. சிஎஸ்கே விளையாடும் போது தொடர்ந்து என்கரேஜ் பண்ணிட்டு இருந்தேன்.

தர்ஷனா கொடுத்த விளக்கம்:

இருந்தாலும், அப்சட்டில் தான் இருந்தேன். டிவியில் மேட்ச் பாக்குறதுக்கும் லைவ் மேட்ச் பாக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. எனக்கு டைம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போவேன். அதோட என்னுடைய புகைப்படங்களுக்கு இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நினைக்கவில்லை. ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனபோது ட்ரெண்டானேன். அதே மாதிரி தான் மீண்டும் பிரபலம் ஆகி இருக்கேன். இப்போது சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக படங்களிலும் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

தர்ஷனா குறித்த தகவல்:

தர்ஷனா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இதற்கு முன்பே இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருந்தார். தமிழும் சரஸ்வதியும் சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. ஆனால், இடையிலேயே இவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full