தீனா படத்திற்கு முன்பாகவே படத்தில் நடித்துள்ள முருகதாஸ். இதோ அந்த காட்சி.

0
2156
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள் அனைவருமே துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்களாக தான் இருப்பார்கள். அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மட்டும் விதிவிலக்கு இல்லை.இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் முருகதாஸ் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முருகதாஸுக்கு தனது முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is murugadoss-1.jpg

அந்த படத்தை தொடர்ந்து ரமணா, கஜினி, கத்தி என்று தொடர்நது ஹிட் படங்களை கொடுத்தார் முருகதாஸ். இறுதியாக இவரது இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படமும் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது. தற்போது துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என்று மூன்று படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஜய்யுடன் இணையவுள்ளார்.

- Advertisement -

தற்போது வெற்றி இயக்குனராக இருந்து வரும் ஏ ஆர் முருகதாஸ் முதலில் ஒரு வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவுக்கு வந்தார். பின்னர் ரட்சகன், குஷி போன்ற படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும் முருகதாஸ் சில படங்களிலும் தலை காண்பித்துள்ளார்.

நடிகர் அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பூச்சூடவா’ என்று படத்தில் நடிகர் மணிவண்ணனுடன் ஒரு சிறு காமெடி காட்சியில் நடித்திருப்பார் முருகதாஸ். அந்த படத்தில் சரியாக 25.12 நிமிடத்தில் அந்த படத்தில் தோன்றியிருப்பர் முருகதாஸ்.

-விளம்பரம்-
Advertisement