ஆமா, நீங்களும் உங்க உடம்ப பாத்துக்கோங்க – பாடகி போட்ட பதிவால் ரகுமானுக்கு வேணுகோள் வைக்கும் ரசிகர்கள்.

0
334
Arrahman
- Advertisement -

ஏ ஆர் ரகுமானின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் நலம் விசாரிக்கும பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகராக இருந்தவர் கிருஷ்ணகுமார் குன்னாத். இவரை எல்லோரும் கேகே என்று தான் அழைப்பார்கள். இவர் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் பாடியிருந்தார். மேலும், இவர் பின்னணி இசைப் பாடகர் மட்டுமில்லாமல் பாப் மற்றும் ராக் இசை பாடகராக இருந்தவர்.

-விளம்பரம்-

இவர் திரைப்படங்களில் பாடுவதற்கு முன்பு 3500 சிற்றிசைகளில் பாடியிருக்கிறார். அதற்கு பின் தான் இவர் திரைத்துறை உலகில் பாட ஆரம்பித்தார். அதுவும் தமிழில் இவர் காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களை பாடியிருக்கிறார். அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

கிருஷ்ணகுமார் குன்னாத் இசைப்பயணம்:

மேலும், இவர் தமிழில் இதுவரை 50க்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமானுக்கு அவருடைய குரல் பிடித்துப்போனதால் பல படத்தில் பாட வாய்ப்பு தந்து இருந்தார். இப்படி பல இனிமையான காதல் பாடல்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் கிருஷ்ணகுமார் குன்னாத். மெல்லிசை பாடல்கள் மட்டும் இல்லாமல் பல குத்து பாடல்களையும் இவர் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் வெளிவர உள்ள தி லெஜன்ட் படத்தில் இவர் இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார்.

கிருஷ்ணகுமார் குன்னாத் இறப்பு:

இப்படி ஒரு நிலையில் கொல்கத்தாவில் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடும் போது கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. அதனை அடுத்து அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள சி எம் ஆர் ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தார்கள். இருந்தும் அவர் உயிரிழந்து விட்டார். இவருடைய மறைவு இந்திய இசைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் போட்ட டீவ்ட்:

மேலும், இவருடைய மறைவுக்குப் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பாடகர் கே கே வின் இறப்பிற்கு ஏ ஆர் ரகுமான் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், அன்புள்ள கேகே, என்ன அவசரம் நண்பா! உங்களைப் போன்ற திறமையான பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த வாழ்க்கையை இன்னும் தாங்கக்கூடியதாக செய்தீர்கள்’ என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பாடகி ஸ்வேதா டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் குறித்து ரசிகர்கள் போட்ட பதிவு:

அதில் அவர், சார் தயவு செய்து உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாக தூங்குங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து பலரும் ஏ.ஆர்.ரகுமான் சார் உங்களுடைய உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். ஓய்வெடுங்கள், தூக்கம் ரொம்ப முக்கியம். அதிகம் வேலை செய்யாதீர்கள், நன்றாக சாப்பிடுங்கள் என்று அக்கறையுடன் விசாரித்து பதிவிட்டு வருகிறார்கள். தற்போது ஏ ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து ரசிகர்கள் போடும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement