சுஷாந்த் சிங் ரசிகர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்த ஏ.ஆர்.ரஹ்மான்.

0
1754
arr
- Advertisement -

சமீப காலமாகவே இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அநியாயமாக உயிரிழந்து வருகின்றனர். ரிஷி கபூர், இர்பான் கான், இசையமைப்பாளர் வஜித் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா போன்ற பல பிரபல நடிகர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரண செய்தி கேட்டு பிரதமர் தொடங்கி அரசியல் பிரபலங்களும், திரைபிரபலங்கள் மற்றும் முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

-விளம்பரம்-

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்நிலையில் சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படமான Dil Bechara என்ற படம் கூடிய விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை பார்த்த ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

மேலும், இதை எதிர்க்கும் வகையில் ரசிகர்கள் #DilBecharaOnBigScreen என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ட்வீட் செய்து உள்ளார். ‘the fault in our stars’ என்ற ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் தான் Dil Bechara.

Image

இந்த படத்தை இயக்குனர் முகேஷ் சாப்ரா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுஷாந்துக்கு ஜோடியாக சஞ்சனா நடித்துள்ளார். நடிகர் சுஷாந்த் நடிப்பில் உருவான டிரைவ் என்ற படம் கடைசியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement