தமிழ் சினிமாவின் இசைப்புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் காலமாகி இருக்கிறார். ” இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஏ.ஆர். ரகுமான் அவர்களின் உண்மையான பெயர் திலீப் குமார். இவர் தன்னுடைய 23வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவினார். இவருடைய அப்பா பெயர் ஆர்.கே.சேகர். இவர் மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். அதுமட்டுமில்லாமல் ஏ.ஆர். ரகுமானுக்கு சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர்.இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’

என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானர்.

Advertisement

உண்மையிலேயே சொல்லவேண்டுமென்றால் ஏ ஆர் ரஹ்மானுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவாம். ஆனால், இவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். பின்னர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும், இவர் உதவி தொகை பெற்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக் பட்டமும் பெற்றார். அதற்குப் பின்னர் தான் இவர் இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின் எம்எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், ரமேஷ் நாயுடு உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் திரைத்துறையில் இசை அமைப்பதற்கு முன் விளம்பரப் படங்களுக்கு தான் இசையமைத்து வந்தார். மேலும், இவர் முதன் முதலாக இசை அமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான “யோதா” என்ற திரைப்படத்துக்கு தான். ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்னர் தமிழில் ரோஜா படம் வெளியானதால் ரோஜா படமே ரகுமானின் முதல் படமாக மாறியது. இது பல பேருக்கு தெரியாத விஷயம். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ரோஜா படத்தின் போது 25 ஆயிரம் ரூபாய் சம்பளமும் பெற்றார். இவருடைய முதல் படத்திலேயே பாடல்கள் எல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட்டு கொடுத்தது. ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு சிந்து பைரவி ராகத்தில் உள்ள பாடல்களை தான் அதிகம் விரும்பி கேட்பார். இவர் எப்போதும் இரவு நேரங்களில் தான் இசையமைப்பார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரகுமானின் தாயார் வயது முதிர்வு காரணமாக காலமாக இருக்கிறார்.இந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தாயாரின் மரணத்தை அவரது புகைப்படம் ஒன்றை போட்டு ஏ ஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் தாயார் காலமானதை அடுத்து பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று பல்வேறு திரை துறை கலைஞர்களும் அரசியல் பிரபலங்களும் தனது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்

Advertisement
Advertisement