மதம் மாறியது குறித்து பேட்டியில் ஏ ஆர் ரகுமான் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் இவர் பல கச்சேரிகளில் பாடி தன்னுடைய இசை திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் .

இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதன் பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவர் மேற்கத்திய இசையை மக்களுக்கு கொண்டு சென்றவர். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர்.

Advertisement

ஏ.ஆர் ரகுமான் திரைப்பயணம்:

சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர் ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட்,கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் இசை அமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றிய படங்கள்:

சமீபத்தில் தான் இவர் இசையில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி மக்கள் மத்தியி நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக இவர் உதயநிதி நடிப்பில் வந்த மாமன்னன் படத்தில் பணியாற்றி இருக்கிறார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனை அடுத்து இவர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், அயலான், ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார்.

Advertisement

ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி:

இப்படி இவர் படங்களில் பிசியாக இருந்தாலும், அவ்வபோது பேட்டியும் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தான் மதம் மாறியது குறித்து கூறியிருந்தது, நான் இந்துவாக இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியப் பிறகு எந்தவித சமூக சார்ந்த அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை. இந்தியர்கள் அனைத்து மதங்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

Advertisement

மதம் குறித்து சொன்னது:

அதனால்தான் நான் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை. இந்து மதத்தில் பிறந்து இஸ்லாமிய மதத்திற்கு நான் 20 வயதில் மாறினேன். மேலும், இந்தியர்கள் மிகவும் திறந்த மனதோடு இருப்பவர்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் சிறந்த மனப்பான்மையோடு இருப்பதை தாண்டி மிகவும் அரவணைப்போடும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். வாழு வாழ விடு என்ற கோட்பாடு படி வாழ்பவர்கள் தான் அதிகம். ஆனால், அரசியல் சூழ்நிலையால் சில ஆண்டுகளாக நாட்டில் வித்தியாசமான சூழல் நிலவி வருவதை என்னால் உணர முடிகிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement