காமெடியானக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்துள்ள சந்தானம் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இருப்பினும் முழு ஹீரோவாக மாறிவிடாமல் தனது கலாய்க்கும் ஸ்டைலையும் சேர்த்து காமடிகலந்த ஹீரோவா சப்ஜக்டை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சந்தானம்.

Advertisement

அந்த வகையில் நாளைய இயக்குநர் நான்காவது சீசனின் டைட்டில் வின்னரான ஜான்சன் இயக்கியுள்ள ‘A1’ படம் இன்று (ஜூலை 26) வெளியாகியுள்ளது. சந்தானத்தின் நண்பரான ராஜ் நாராயணனின் சர்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ‘கோலமாவு கோகிலா’ ரெடின், டைகர் கார்டன்  தங்கதுரை, ஆதி படத்தில் வில்லனாக நடித்த சாய்குமார் குமார் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

இதையும் பாருங்க : அட பாவிங்களா, மீரா இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராம்.! விளங்கிடும்.! 

கதைக்களம் :

Advertisement

அட்டு லோக்கல் இளைஞருக்கும் அக்கிரகாரத்து இளம் பெண்ணிற்கும் ஏற்படும் காதல் கதைதான் இந்த படத்தின் ஒன் லைன். ஹீரோவான சந்தானம் சாதாரண ஏரியாவில் லோக்கலாக வாழ்ந்து வருகிறார். இவரை பிராமின் கெட்டப்பில் பார்க்கும் கதாநாயகி சந்தானத்தின் மீது காதலில் விழுகிறார். அதன் பின்னர் அவர்கள் லோக்கல் என்று தெரிந்ததும் காதலை பிரேக் அப் செய்து விட்டு சென்று விடுகிறார் கதாநாயகி.

Advertisement

பின்னர் ஒரு கட்டத்தில் கதாநாயகியின் தந்தையை சந்தானம் ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றி விட சந்தானத்தின் மீது உண்மையாக கதாநாயகிக்கு காதல் ஏற்பட்டு விடுகிறது ஆனால் சந்தானம் லோக்கல் என்பதால் அவருக்கு பெண் தர மறுத்து விடுகிறார் கதாநாயகியின் தந்தை.

தன் காதலுக்கு தனது காதலியின் தந்தை தான் பிரச்சனை என்று நினைக்கும் சந்தானம் ஒரு முறை தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு கஷ்டத்தில் உளறுகிறார். இதனால் சந்தானத்தின் நண்பர்கள் ஒரு விபரீத செயலை செய்துவிடுகின்றனர். இதனால் என்ன நடக்கிறது, இறுதியில் சந்தானம் தனது காதலியுடன் சேர்ந்தாரா என்பதை காமெடி கலந்த காட்சிகளுடன் படம் பயணிக்கிறது.

ப்ளஸ் :

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சந்தானத்தின் டைமிங் காமெடி தான். அதிலும் வழக்கமாக மற்றவர்களை அசிங்கப்படுத்தி காமெடி செய்து வந்த சந்தானம் இந்த படத்தில் மற்றவர்களை புண்படுத்தாத வகையில் காமெடி செய்துள்ளதற்கு ஒரு சபாஷ். ‘கோலமாவு கோகிலா’ ரெடின் இந்த படத்திலும் தனது வித்யாசமான காமெடியால் அசத்தியுள்ளார். குறிப்பாக இந்த படத்தில் சந்தானம் நிறைய ஹீரோயிசயத்தை காண்பிக்கவில்லை என்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலம். படத்தில் வரும் ஒரு சில பாடல்கள் ரசிக்கும்படி கொஞ்சம் வித்யாசமாக உள்ளது குறிப்பாக மாலை நேர மல்லிப்பூ பாடல்.

மைனஸ் :

படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை, படத்தில் வரும் சென்டிமென்ட் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைகிறது. ஒரு சில காமெடிகளுக்கு நாம் சிரிக்க முடியவில்லை. மெலடி பாடல்களுக்கும், மாஸ் பாடல்களுக்கும் பேர் போன சந்தோஷ் சிவனின் இசை இந்த படத்தில் முழுக்க முழுக்க தர லோக்கல் கானாவில் இறங்கியுள்ளது. படத்தில் சந்தானம், எம் எஸ் பாஸ்கர், ‘கோலமாவு கோகிலா’ ரெடினை தவிர மற்ற நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போல தெரியவில்லை.

ஸ்னீக் பீக் வீடியோவில் வந்த சில ஹைலைட்டான காமெடிகள் படத்தில் இடம்பெறாதது கொஞ்சம் வருத்தம், முக்கியமாக பயந்தாரா பிக்னேஷ் பவன் காமெடி. மேலும், படத்தில் வரும் கதாநாயகி வழக்கம் போல வசனத்தை கோட்டை விட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். டப்பிங் படம் பார்த்தது போல தான் இருந்தது.

இறுதி அலசல் :

தியேட்டருக்கு சென்று நன்றாக சிரித்தாள் போதும் எனக்கு லாஜிக் கதை பற்றியெல்லாம் கவலை இல்லை என்பவர்களுக்கு இந்த படம் ஒரு சிரிப்பு சரவெடி. படத்தில் குறைந்தது 20 முறையாவது நீங்கள் வாய்விட்டு சிரிக்கலாம்.

Advertisement