பொய்யான மோசடி..! பணம் வசூல் செய்யும் கும்பல்..! இதை நம்பாதீங்க..! வீடியோ வெளியிட்ட ஆலியா மானசா!

0
1401
Alya-Manasa

சினிமா நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் ஹீரோயின்கள் வெகு விரைவாக பிரபலமடைந்து விடுகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ சீரியலில் செம்பா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானஸா தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துவிட்டார்.

- Advertisement -

சீரியல் நடிப்பதற்கு முன்பாகவே இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ எனும் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இருப்பினும் இவருக்கு “ராஜா ராணி ” தொடர் மூலமே பேரும் புகழும் கிடைத்தது. தற்போது விளம்பர படங்கள், நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்வது என்று படு பிஸியாக உள்ளார் மானஸா.

இந்நிலையில் நடிகை மானஸா கனடா நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என்று ஒரு தனியார் அமைப்பு டிக்கெட்களை விற்று வந்துள்ளது. இந்த தகவலை மறுத்துள்ள நடிகை மானஸா தனது பெயரை வைத்து மோசடி நடப்பதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement