இசையமைப்பாளரை காதலிக்கும் அமீர் கானின் மகள்.! அவரே வெளியிட்ட நெருக்கமான புகைப்படம்.!

0
462
Amir-Khan

பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அமீர் கான், இன்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இன்றும் இந்தி சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார்.53 வயதாகும் இவர், 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ft15oaj

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு தனது மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்து விட்டார் அமீர் கான். அதன் பின்னர் நடிகர் அமீர் கான் “லகான்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : நேர்கொண்ட பார்வை ட்ரைலரை பார்த்துவிட்டு ட்விட்டரில் புகழ்ந்த நயன்தாரா.!

இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகனும் பிறந்தார். தனது முதல் மனைவியுடன் விவாகரத்து ஆன போதும் தனது முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் அமீர் கான் நன்றாக பார்த்துக் கொள்கிறார்.அமீர் கானின் மகள் அவ்வளவாக வெளியில் ஊர் சுற்றுவதும் இல்லை.

இந்த நிலையில் யாரையாவது காதலிக்கிறீர்களா? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு இன்ஸ்டாகிராமில் இரா போட்டோவுடம் பதில் அளித்துள்ளார். அவர் மிஷால் கிருபளானி என்ற இசையமைப்பாளரை காதலித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஐரா மற்றும் மிஷால் கிருபளானி இருவரும் நெருக்கமாக உள்ள போட்டோக்களையும் இன்ஸ்டாக்ராமில் அதிகம் வெளியிட்டுள்ளார் ஐரா. இந்த புகைப்படத்தை கண்ட பலரும் ஐராவின் காதலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த செய்தி தற்போது பாலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.