பிக் பாஸோட மாமியார் ஐஸ்வர்யா அம்மா..! பிக் பாஸை அசிங்கப்படுத்திய பிரபல நடிகை.!

0
686
Aishwrya
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 2விற்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் இருந்து வருகின்றனர். சீசன் ஒன்றை விட சீசன் 2 ஏதோ பிக் பாஸே திட்டமிட்டு நடத்தி வருவதுபோல இருக்கிறது என்பது தான் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

- Advertisement -

அதிலும் குறிப்பாக யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் வாரா வாரம் காப்பாற்றபட்டு வருவது தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. இந்நிலையில் காமெடி நடிகையும், முன்னாள் போட்டியலுருமான நடிகை ஆர்த்தி ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸ் மாமியார் என்று ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகை ஆர்த்தி, பிக் பாஸ் மாமியார் பின்றாங்க என்று ஐஸ்வர்யாவின் அம்மாவை குறிப்பிட்டு கூறியுள்ளார். ஆர்த்தியின் இந்த பதிவை புரிந்து கொண்ட ட்விட்டர் வாசிகள் ஐஸ்வர்யா மீது பிக் பாஸிற்கு தனி கனிவும், பரிவும் இருப்பதால் தான் ஆர்த்தி இப்படி கூறியுள்ளார் என்று கூறிவருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸில் இதுவரை ஐஸ்வர்யா தொடர்ந்து 7 வருங்களாக நாமினேஷனில் வராமல் பிக் பாஸ் காப்பற்றி வருகிறார். அவர் நாமினேட் ஆனாலும் தலைவி என்ற பட்டம் கொடுத்தோ, சூப்பர் பவர் மூலமே ஐஸ்வர்யா பல முறை காப்பாற்றபட்டு இருக்கிறார். இதனால் பிக் பாஸிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் என்னவிதமான சம்மதம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருது நாங்கள் சொல்லி தெரிவிய வேண்டியது இல்லை.

சமீபத்தில் ஐஸ்வர்யா, தன்னை கடவுள் தான் காப்பாற்றி வருகிறார் என்று கூறிய போது கூட ரித்விகா, ஜனனி, மும்தாஜ் ஆகியோர்களை ஐஸ்வர்யாவை, அவரது தோழி யாஷிகா தான் கைப்பற்றி வருகிறார் என்று கூறியிருந்தனர். ஆனால், உண்மையில் ஐஸ்வர்யாவை பிக் பாஸ் தான் வாரா வாரம் காப்பற்றி வருகிறார் என்பது தான் உண்மை. இதனை குறிப்பிட்டே நடிகை ஆர்த்தி ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸின் மாமியார் என்று கிண்டலடித்துள்ளார்.

Advertisement