அழகுக்காக உதடு அறுவை சிகிச்சை.! சீரியல் நடிகைக்கு நேர்ந்த விபரீதத்தில் சம்பவம்.! புகைப்படம் உள்ளே .!

0
315
Aashka-Goradia-Actress

நடிகைகளில் பல பேர் பிளாஸ்டிக் சர்ஜெரி எனப்படும் உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். அதிலும் இந்த மோகம் இந்தி சினிமாவில் அதிகப்படியாக காணப்பட்டு வருகிறது. இந்தி நடிகைகளில் பிரியங்கா சோப்ரா, ஸ்ரீதேவி, அனுஸ்கா ஷர்மா போன்ற பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ளனர்.

Aashka Goradia

அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளருமான ஆஸ்கா கோராடியா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது உதட்டை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார். தொலைக்காட்சி நடிகையான ஆஸ்கா கோராடியா ‘நாகினி 2 ‘ தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தனது உதட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு இவரது உதட்டின் அமைப்பு ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகின. ஆனால், எந்த ஒரு விமர்சனத்திற்கும் நீண்ட காலமாக பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்தார் நடிகை ஆஸ்கா கோராடியா.

Aksha

aashka-goradias

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான பிரென்ட் கோப்பல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஆஸ்கா கோராடியா. சமீபத்தில் தனது அறுவை சிகிச்சை மீதான விமர்சனம் குறித்து பதிலளித்துள்ள நடிகை ஆஸ்கா கோராடியா, எனது கணவர் என்னிடம் இருந்து மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணரவைத்து விட்டார். என்னை சிலர் அவமானபடுத்தினாலும் அதை பற்றி நான் வெட்கப்படபோவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.